நம்முடைய வாழ்வில் இயற்கை நமக்கு பல்வேறு அற்புதங்களை வழங்குகிறது. அவற்றில், நாம் உண்ணும் உணவு பொருட்களும் முக்கியமானவை. அப்படியான உணவு பொருட்களில் ஒன்று தான் பசலைக்கீரை.
ஆம், இந்த பசலைக்கீரையில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன.
இந்த கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளும் ஒரு சிறப்பான உணவு பொருளாகவும். பசலைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை என்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது ஆரோக்கியம் அதிகரிக்க செய்யும்.
பசலைக் கீரையில் விட்டமின் சி, வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ போன்றவை அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகள், சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.
மலச்சிக்கல், தொந்தி மூத்திரக் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை படுதல் போன்றவற்றுக்கும் இந்தக் கீரை சிறப்பான மருத்துவ பொருளாகும்.
ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும். அது மட்டுமின்றி, உடல் சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. இது மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது.
தேவையானவை:
அரைக்கீரை அல்லது பசலைக் கீரை - ஒரு கட்டு
புளி - எலுமிச்சை அளவுக்கும் சிறிது மேலே
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 2
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம் !
செய்முறை:
புளியை நன்றாகக் கரைத்து வைக்கவும்.மண் போகக் கீரையை அலசி வைக்கவும். மிதமான சூட்டில் ஒரு வாணலியில் வெந்தய த்தையும் மிளகாய் வற்றலையும் சிவக்க வறுத்துத் தனியே வைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் கீரையைப் போட்டு 2 டம்ளர் அளவு கரைத்துள்ள புளிக்கரைசலை விடவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
வறுத்து வைத்துள்ள வெந்தயம், மிளகாய் வற்றலைக் கீரை, புளிக்கலவை யுடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.
டெங்கு, சிக்குன் குனியா பயப்பட வேண்டாம்?
கீரை வெந்ததும் காற்றாட ஆற விட்டு பிறகு மின்னரைப் பானில் அரைக்கவும். நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்க வேண்டும்.
அரைத்தப் புளியிட்ட கீரையுடன் கடுகு தாளிசத்தைச் சேர்க்கவும். செய்வதற்கு எளிதான புளிப்பான புளியிட்ட கீரையை பத்து நிமிடங்களில் தயாரித்து விடலாம்.
குழம்பு செய்வதற்குப் பதிலாகப் புளியிட்ட கீரையும் பொரியல், அப்பளம் செய்து உண்ணலாம்.