காளான்கள் சிடின் மற்றும் பீட்டா-குளுக்கனின் நல்ல மூலமாகும், இது கொழுப்பை குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிப்பி, ஷிடேக், எனோகி, ஷிமேஜி, போர்டோபெல்லோ மற்றும் போர்சினி என உண்ணக்கூடிய காளான்கள் பல வடிவங்களில் உள்ளன.
இந்த காளான்கள் பல்துறை திறன் கொண்டவை. அவை உலகெங்கிலும் உள்ள மக்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தாலும் சரி இல்லா விட்டாலும் சரி, காளான்களை தங்கள் உணவுகளில் சேர்த்து கொள்கின்றனர்.
காளான்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு நன்மைகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, குறிப்பாக அவை பீட்டா-குளுக்கன்களை கொண்டிருப்பதால் பல நன்மைகளை அளிக்கிறது.
எனவே, பெரும்பாலான உணவுகளைப் போலவே ஊட்டச்சத்து அடர்த்தியான, காளான்களும் ஆரோக்கியத்தை அளிக்கின்றன. இன்றைய தலைமுறையின் முக்கிய உணவுளில் ஒன்று காளான்.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த காளான் மற்ற பொருட்களை காட்டிலும் அதிகளவு புரோட்டின், மற்றும் குறைந்த கலோரிகள் உடையதாகும்.
எனவே இது சுவையான உணவாக மட்டுமில்லாமல் சத்தான உணவாகவும் இருக்கிறது. காளான் சத்தான பொருளாக இருந்தாலும் அதனை அனைவரும் சாப்பிட்டு விட முடியாது.
சிலருக்கு சரும அலர்ஜி பிரச்சினைகள் இருக்கும், அப்படிப் பட்டவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.
தேவையானவை:
பட்டன் காளான்-200 கிராம்
பெல்லாரி-2
பச்சை மிளகாய்-3
மிளகாய் பொடி-1 தேக்கரண்டி
மல்லி பொடி-1 தேக்கரண்டி
ரகம்-1/2 தேக்கரண்டி
கசகசா -1/2 தேக்கரண்டி
சோம்பு-1/2 தேக்கரண்டி
பட்டை-சிறு துண்டு
கிராம்பு-2
இஞ்சி-1 இன்ச்
பூண்டு-10
தயிர்-1தேக்கரண்டி
எண்ணெய்-4 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
கறிவேப்பிலை-ஒரு கொத்து
மல்லி தழை-கொஞ்சம்
தயிர்-1தேக்கரண்டி
எண்ணெய்-4 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
கறிவேப்பிலை-ஒரு கொத்து
மல்லி தழை-கொஞ்சம்
வெறும் வயிற்றில் பச்சை முட்டை ஆரோக்கியமா?
காளானைத் துடைத்து, பின் கழுவி நான்காக நறுக்கவும். பெல்லாரியை மெலிதாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும்.
சீரகம், சோம்பு, கசகசா, பட்டை,கிராம்பை சேர்த்து நன்கு அரைக்கவும். பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், வெங்காயத்தை லேசாக வதக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய காளான், அரைத்த விழுது, வதக்கிய வெங்காயம், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, தயிர் + உப்பு போட்டு 2 தேக்கரண்டி நீர் ஊற்றிப் பிசையவும்.
பின்னர் இதனை குளிர்பதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும். குளிர் பெட்டி இல்லையென்றால், வெளியிலேயும் ஒரு மணி நேரம் வைக்கலாம்.
பிறகு, அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மசால் போட்ட காளானை போடவும். தீயைக் குறைத்து குறைவாக எரிய விடவும்.
காளானில் நீர் வற்றி, சிவப்பு நிறம் வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும். நன்றாக சிவந்து வறுபட்டதும், இறக்கி, கறிவேப்பிலை, மல்லி தழை தூவி பரிமாறவும்.
இந்த காளான் அட்டகாசமாய் இருக்கும். இதனை சப்பாத்தி, பூரி,சாம்பார் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புலவு, மட்டன் குழம்பு, தயிர் சாதம் எதனுடனும் தொட்டு சாப்பிடலாம்.
செய்து பார்த்து, சுவைத்த பின் சொல்லுங்களேன்..!