குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும் உணவுகள் !





குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும் உணவுகள் !

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சுகமான அனுபவம். எனினும் நிறைய பெற்றோர்கள் அதை சுகமாக நினைக்காமல் சுமையாகவே கருதுகின்றனர். 
குழந்தைகளை வளர்க்க
பெற்றோர் என்ற ஸ்தானம் எளிதானதல்ல. பெற்றோருக்கான பொறுப்புகள் என்பது ஒரு போதும் முடிவடையாத ரோலர் கோஸ்டர் சவாரி போன்றது. 

வீட்டுப்பாடங்களை முடிக்காததற்காக உங்கள் குழந்தைகளை நீங்கள் திட்டும் நாட்களும், பள்ளிக்குச் சென்றதற்காக உங்கள் குழந்தைகளுக்கு வெகுமதி அளிக்க வேண்டிய நாட்களும் ஏராளம் இருக்கும். 

குழந்தைகளை வளர்க்கும் போது, பெற்றோர்களும் அவர்களுடன் சேர்ந்து வளர்கிறார்கள். குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. 

அதிலும் குழந்தை இந்த பூமியில் கால் பதித்தவுடனே பெற்றோர்களின் புதிய பொறுப்பு தொடங்கி விடுகிறது. குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் வாழ்க்கையிலும் முக்கியமான கட்டமாகும்.

குழந்தைகளை வளர்ப்பது என்பது எளிதான காரியம் இல்லை. அதிலும் குழந்தைகளின் உணவு விசயத்தில் பெற்றோர்கள் பெரும் போராட்டத்தை சந்திக்கிறனர். 

எந்த உணவை கொடுத்தாலும் சாப்பிட வில்லை என்று குழந்தைகள் மீது குற்றம் சுமத்துக்கின்றோம்.
நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள் !
உண்மையில் தவறு நம் மீதுதான் என்பதை மறந்து போகிறோம். ஒரு சில வழிமுறை களை பின்பற்றுவது மூலம் எளிதாக அவர்களை ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட வைக்கலாம்

முதலில் குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுங்கள். பின்னர் அவர்களுக்கு பிடிக்காத அதே சமயத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை அதனுடன் சேர்த்து பரிமாறுங்கள்.

சில குழந்தைகள் தாய் அருகில் இருந்தால் தான் சாப்பிடும். இது போல் சில குழந்தைகள் பாட்டி, தாத்தா போன்றோர்கள் மீது பாசம் வைத்திருக்கும். 

எனவே அவர்கள் அருகிலிருக்கும் போது உணவு பரிமாறினால் அடம் பிடிக்காமல் உண்ணுவார்கள். அடுத்ததாக, அளவான உணவையே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். அவர்கள் விரும்பினால் திரும்பவும் பரிமாறலாம்.

குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்காத உணவுகளை சாப்பிடுமாறு வற்புறுத்த வேண்டாம். மேலும் உணவு உண்ணும் நேரத்தில் நொறுக் குத்தீனிகள் தருவதையும் தவிர்க்க வேண்டும்.

அதேவேளையில் உணவு உண்டபின் தண்ணீர் அல்லது பழச்சாறு ஆகியவற்றை கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஒரே உணவு வகையை கொடுக்காமல் புதிது புதிதாக செய்து கொடுங்கள்.
இது அவர்களுக்கு உணவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். விளையாட்டு என்றால் வீடியோ கேம் இல்லை.

அவர்களின் உடல்களுக்கு புத்துணர்ச்சி தருகிற வெளிப்புற விளையாட்டு களை கற்றுக் கொடுங்கள். இது அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருப் பதோடு அவர்களின் பசியையும் அதிகரிக்கும்.
Tags: