ஒரு காலத்தில் ராயல்டிக்கான உணவாக இருந்த பிரியாணி, இன்று உள்ளூர் உணர்வுகள் மற்றும் மரபுகளைப் பிரதிபலிக்கிறது மற்றும் பிரபலமான மற்றும் பொதுவான உணவாக மாறி விட்டது.
இன்று இந்தியாவில் ஹைதராபாத் பிரியாணி, முகல் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, லக்னோ பிரியாணி, தலசேரி பிரியாணி, பெங்களூர் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி, சிந்தி பிரியாணி என பல வகைகள் உள்ளன.
ஒவ்வொன்றும் தனித்துவமான சுவையில் நம்மை பிரமிக்க வைக்கின்றன. மும்தாஜ் ஒருமுறை ராணுவ முகாம்களுக்குச் சென்று பார்த்தபோது முகலாய வீரர்கள் பலவீனமாகவும், ஊட்டச்சத்து குறைவாகவும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
வீரர்களுக்கு சமச்சீரான ஊட்டச்சத்தை வழங்குவதற்காக இறைச்சியையும் அரிசியையும் சேர்த்து ஒரு சிறப்பு உணவை தயார் செய்யும்படி அவள் சமையல்காரரிடம் கேட்டார் எனவும் அதன் விளைவாக பிரியாணி உருவானது என்றும் கூறப்படுகிறது.
தேவையான பொருள்கள் :
பாசுமதி அரிசி - ஒன்றரை கப்
வெங்காயம் - 3
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 7 பற்கள்
தக்காளி - 2
புதினா, கொத்த மல்லித் தழை - தலா ஒரு கைப்பிடி அளவு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை - பாதி
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - ஒன்று
மிளகு - 4
சீரகம் - ஒரு சிட்டிகை
சோம்பு - ஒரு சிட்டிகை
ஜாதிக்காய் - கால் பாகம்
ஜாதிபத்திரி - கால் பாகம்
நட்சத்திர மொக்கு - சிறு துண்டு
காலையில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்கள் !
தாளிக்க:
பிரியாணி இலை - ஒன்று
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை :
வறுத்து பொடிக்க வேண்டிய வற்றை வெறும் கடாயில் லேசான தீயில் வைத்து வறுத்து, ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, தட்டிய இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிள்காய் சேர்த்து வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்த மல்லித் தழை சேர்த்து வதக்கவும்.
பிறகு தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். அத்துடன் 2 1/2 - 3 கப் தண்ணீர் (பயன்படுத்தும் அரிசிக்கு ஏற்ப) ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி !
கொதி வந்ததும் அரிசியைத் தண்ணீரில்லாமல் வடித்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் மூடி போட்டு தீயைக் குறைத்து வைத்து வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் பொடித்த மசாலா தூவி எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மூடி, 15 நிமிடங்கள் தம்மில் வைத்திருந்து எடுத்துக் கிளறி விடவும்.
அசைவ பிரியாணியைப் போலவே மணமும், சுவையும் நிறைந்த எம்டி பிரியாணி (Empty Biriyani) தயார்.