பெங்களூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?





பெங்களூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

இந்த பிரியாணியில், புதினா + கொத்தமல்லி + இஞ்சி, பூண்டு+ பச்சை மிளகாயினை கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
பெங்களூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
தயிரினை கண்டிப்பாக அரிசி போட்ட பிறகு தான் சேர்க்க வேண்டும். அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல பச்சை மிளகாயினை சேர்த்து கொள்ளவும்.

பச்சை மிளகாயினை அரைத்து சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் காரமாக இருக்கும். அதனால் மிளகாய் தூளினை பார்த்து சேர்த்து கொள்ளவும்.
சிக்கனுடன் எதுவும் சேர்த்து Marinate செய்ய தேவை யில்லை. விரும்பினால் மிளகாய் தூள் வகைகள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளலாம். இஞ்சி பூண்டு எல்லாம் சேர்த்து அரைத்து கொள்வதால், தனியாக சேர்க்க தேவையில்லை.

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/2 கிலோ

பாஸ்மதி அரிசி – 2 கப்

தயிர் – 1/2 கப்

எலுமிச்சை – பாதி பழம்

அரைத்து கொள்ள :

புதினா – 1 கைபிடி அளவு

கொத்தமல்லி – 1 கைபிடி அளவு

இஞ்சி – 1 பெரிய துண்டு

பூண்டு – 5 பல் பெரியது

பச்சை மிளகாய் – 3 நறுக்கி கொள்ள : · வெங்காயம் – 2 பெரியது

தக்காளி – 2

புதினா – 15 – 20 இலைகள் (Optional)
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :

மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

கரம்மசாலா தூள் – 1/2 தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
எண்ணெய் – 1 மேஜைகரண்டி

நெய் – 1 மேஜை கரண்டி

பட்டை – 1,கிராம்பு – 2, ஏலக்காய் – 2

செய்முறை :
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். வெங்காயம் + தக்காளியினை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
புதினாவினை நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியினை தண்ணிரில் சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். 

சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து, அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். 

வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளியும் நன்றாக வதங்கிய பிறகு அத்துடன் அரைத்த விழுதி + நறுக்கிய புதினா இலையினை சேர்த்து வதக்கவும். 

இத்துடன் கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து மேலும் 3 - 4 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். (எண்ணெய் வெளியே வரும் வரை). 
இப்பொழுது சிக்கனை அதில் சேர்த்து கலந்து வேக விடவும். சிக்கனை சுமார் 5 – 6 நிமிடங்கள் வேக விடவும். இத்துடன் 3 – 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 

கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியினை கழுவி, இதில் சேர்த்து வேக விடவும்.(உப்பினை சரி பார்த்து கொள்ளவும்.) 

அரிசி போட்டு சுமார் 5 நிமிடங்கள் கழித்து தயிரினை சேர்த்து கலந்து பிரஸர் குக்கர் மூடியினை மூடி 1 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக விடவும். 
இப்பொழுது சுவையான சிக்கன் பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடி, சிக்கன் ப்ரை, கிரேவியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Tags: