மீன் மிளகாய் மாசாலா செய்வது எப்படி?





மீன் மிளகாய் மாசாலா செய்வது எப்படி?

மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 
மீன் மிளகாய் மாசாலா

சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். 

பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக இருக்கிறது. 

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரிய வந்துள்ளது. 
சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது. 

வாரத்திற்கு ஒருமுறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது.மீனில் பல வகையான டிஷ் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மீன் மிளகாய் மசாலா செய்து சுவைத்திருங்கீங்களா? மிகவும் சுவையானது. சாப்பிட்டுத் தான் பாருங்களேன்.

தேவையான பொருட்கள்

வௌவால் மீன் - 800 கிராம்

வெங்காயம் -2

தக்காளி -2

பூண்டு - 50கிராம்

இஞ்சி, பூண்டு விழுது - 2கரண்டி

சிவப்பு மிளகாய் -12

புளி கரைசல் - 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/2 கப்

உப்பு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை

ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீர் ஊற்றி சிவப்பு மிளகாய் போட்டு வேக வைத்து ஒரு பத்து நிமிடம் கழித்து எடுக்கவும். மிளகாய், 2 முழு பூண்டு சேர்த்து மிக்ஸரில் அரைத்து வைக்கவும்.

மீன் மீது கொஞ்சமாக மஞ்சள் தூள், உப்பு சேர்த்து லைட்டாக பொரித்து எடுத்து வைக்கவும். மீன் பொரித்த எண்ணெயில் பூண்டை போட்டு பொரிக்கவும். சிறிது பொரிந்ததும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். 
பின்னர் வெங்காயம் சேர்த்து லைட்டாக வதக்கினால் போதும். தக்காளி சேர்த்து பாதியளவு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை கலந்து கிளறி அதில் புளி தண்ணீரை ஊற்றி பத்து நிமிடங்கள் வேகவிடவும்.

தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்னர் பொரித்து வைத்துள்ள மீனை குழம்பில் போட்டு 5நிமிடங்கள் ஆனதும் இறக்கினால் சுவையான மிளகாய் மசாலா ரெடி...
Tags: