லெமன் பெப்பர் மீன் வறுவல் செய்வது எப்படி?





லெமன் பெப்பர் மீன் வறுவல் செய்வது எப்படி?

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து உங்கள் சருமத்தை மேம்படுத்த உதவுவது முதல் செரிமானத்திற்கு உதவுவது வரை, தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். 
லெமன் பெப்பர் மீன் வறுவல் செய்வது எப்படி?
பச்சை, மஞ்சள் நிறம் கலந்த வட்டமான இந்த எலுமிச்சை பழம் புளிப்பு துவர்ப்பு சுவை கொண்ட இயற்கையின் மற்றொரு அதிசயமாகும். எலுமிச்சை சாறு உட்கொள்வது சிறுநீரக கற்களை நிர்வகிக்க உதவும். 

ஏனெனில் இது கல் உருவாவதற்கு முக்கிய காரணமான கால்சியம் ஆக்சலேட் படிகங்கள் படிவதைத் தடுக்கிறது.பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். 

சில உணவு பொருட்கள் உணவில் சேர்த்து கொள்ளும் போது ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.
பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 

தவிர, மட்டன், சிக்கன் போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம்.
தேவையான பொருள்கள்

வஞ்சிரம் மீன் - அரை கிலோ

இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்

லெமன் சாறு - 3 ஸ்பூன்

கொத்தமல்லி இலை - 3 ஸ்பூன்

உப்பு - தேவைாயன அளவு

எண்ணெய் - தேவையான அளவு

பெருஞ்சீரகம் - 2 ஸ்பூன்

கருப்பு மிளகு - 2 ஸ்பூன்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரிச்சை பழம் !
செய்முறை
லெமன் பெப்பர் மீன் வறுவல்
ஒரு கடாயில் மிளகு மற்றும் பெருஞ்சீரகம் எடுத்து பொன் நிறமாகும் வரை வறுத்து ஜாரில் அதை போட்டு பொடித்து கொள்ளவும்.

ஒரு தட்டில் அதை எடுத்து இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, கொத்த மல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும். மீன் துண்டு களை எடுத்து கலவையில் நன்கு புரட்டி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி மீன்களை போட்டு இரு புறமும் பொன் நிறமாகும் வரை வறுக்கவும். சுவையான லெமன் பெப்பர் மீன் வறுவல் ரெடி
Tags: