ஹெல்த்தி உருளைகிழங்கு அல்வா செய்வது எப்படி?





ஹெல்த்தி உருளைகிழங்கு அல்வா செய்வது எப்படி?

இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். 
உருளைகிழங்கு அல்வா
அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக் கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு. உருளைக் கிழங்கை பல விதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். 

உருளை கிழங்கை பல விதமாவும் நம்மால் சமைக்க முடியும். முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணபடுகிறது. 

உருளைக்கிழங்கில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் உடலுக்கு அதிக நன்மையை செய்கின்றனர். இவை உடலில் உள்ள செல்கள் சிதைவடைவதை வெகுவாக குறைத்து, செல்களின் நீண்ட நாள் வாழ்க்கைக்கு உதவுகிறது. 

இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் இளமையான தோற்றமும் நமக்கு கிடைக்கிறது. உருளைக்கிழங்கை காரமாக தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. 

அதை இனிப்பாக கூட செய்து சாப்பிடலாம். நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்தி பல வகையான உணவுகளை சமைத்துள்ள நிலையில், உருளைக்கிழங்கை கொண்டு அல்வா செய்லாம்.

சரி இனி உருளைகிழங்கு பயன்படுத்தி ஹெல்த்தி உருளைகிழங்கு அல்வா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை:

வேக வைத்து தோல் நீக்கிய உருளைக் கிழங்கு – 2,

முந்திரி – 5,

பாதாம் – 5,

பொடித்த வெல்லம் – 3 டேபிள் ஸ்பூன்,

நெய் – 50 கிராம்,

ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன்,

பால் – 100 மில்லி.
செய்முறை:

உருளையை மசித்து பால் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, பாதாமை வறுத்து தனியாக வைக்கவும். அதே நெய்யில் உருளை கலவையைச் சேர்த்து நன்கு வதக்கவும். 

மற்றொரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். உருளையுடன் பாகை சேர்த்துக் கலக்கவும். 

ஏலக்காய்த் தூளையும் சேர்த்து உருளைக் கலவை வாணலியில் ஒட்டாமல், நெய் பிரிந்து வரும் வரை கிளறவும். பிறகு, நெய்யில் வறுத்த நட்ஸைச் சேர்த்துப் பரிமாறவும்.
Tags: