சால்மன் மீன்களின் அறிவியல் பெயர் சால்மோ ஆகும். இவை நன்னீர் மீன்களாகும். சால்மன் ஒரு நீல அல்லது கொழுப்பு நிறைந்த மீன் ஆகும், இது நூறு கிராம் இறைச்சிக்கு பதினொரு கிராம் கொழுப்பை வழங்குகிறது.
சால்மன் மீன்கள் சாப்பிடுவதால் முடி, தோல், மூட்டுகள் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்கும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் முக்கியமாக ஒமேகா 3 காணப்படுகின்றன. இது விந்தணுக்களின் தரம் மற்றும் அளவை அதிகரிக்க உதவுகிறது.
இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய், மூட்டு வீக்கம், மன அழுத்தம், மூளை கோளாறுகள், தோல் கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.
மேலும், இதில் இருக்கும் வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் பி5 ஆகியவை இதயத்தை பாதுகாக்க உதவுகிறது.
இந்தியாவில் கிடைக்கும் பெரும்பான்மையான சால்மன் மீன்கள் உலகில் உள்ள பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை.
நார்வே, கனடா மற்றும் ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் சால்மன் வளர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருப்பதால் உலகம் முழுக்க பயன்படுத்தப் படுகின்றது. சரி இனி மீன் பயன்படுத்தி டேஸ்டியான ஃபிஷ் மொய்லி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை:
மீன் (ஏதாவது ஒரு வகை) - அரை கிலோ
நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 50 கிராம்
கீறிய பச்சை மிளகாய் - 5
இஞ்சி - பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய்ப் பால் - தண்ணீர் சேர்க்காமல் எடுத்த முதல் பால் - ஒரு கப்,
சிறிதளவு தண்ணீர் சேர்த்து எடுத்த இரண்டாம் பால் - ஒரு கப்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு சேர்த்து வெடித்தவுடன் இஞ்சி- பூண்டு விழுது, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன், இரண்டாவ தாக எடுத்த தேங்காய்ப் பால் சேர்த்து, பின்பு ஊற வைத்திருக் கும் மீன் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கி விட்டு சிறிது நேரம் வேக வைக்கவும்.
பின்னர் அடுப்பின் தீயைக் குறைத்து, முதலில் எடுத்த தேங்காய்ப் பால் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி விட்டு பாத்திரத்தை மூடி வைத்து சிறிது நேரம் வேக விட்டு குழம்பு கொதி வந்ததும் இறக்கவும்.
ஃபிஷ் மொய்லி, சாதம் மற்றும் ஆப்பம் ஆகிய வற்றுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும். அதே போல், கோவன் ஃபிஷ் கறியும் ஒருமுறை செய்து பாருங்கள்.