அருமையான மசாலா குஸ்கா செய்வது எப்படி?





அருமையான மசாலா குஸ்கா செய்வது எப்படி?

பச்சரிசி அதிகம் சாப்பிடுவதால் அதிகரிக்கும் உடல் உஷ்ணம் காரணமாக மலக்குடல் தடிப்பு மற்றும் அழற்சி பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதன் காரணமாக மலம் கழிக்கலையில் மலத்துடன் இரத்தம் வெளிப்படுகிறது. 
அருமையான மசாலா குஸ்கா செய்வது எப்படி?
அரிசியை எல்லா விதமான காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் இறைச்சிகளுடன் சேர்த்து சுவையாக சமைக்கலாம். 

காய்கறியுடன் சேர்த்து சமைத்து உண்ணும் போது உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும். அரிசி உணவு சாப்பிடும் போது நமக்கு வயிறு நிறைய உணவு உண்ட தான ஒரு உணர்வை ஏற்படுத்தும். 
உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். ஆனால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் பிரச்சனை உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி பசிக்கும் உணவு தோன்றாது. சரி இனி பச்சரிசி பயன்படுத்தி அருமையான மசாலா குஸ்கா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்,

பால் – 2 கப்,

பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்),

தக்காளி – ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்),

பச்சை மிளகாய் – 3,

புதினா – ஒரு கைப்பிடி அளவு,

கொத்த மல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவு,

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,

பட்டை – ஒன்று,

லவங்கம் – ஒன்று,

ஏலக்காய் – ஒன்று,

பிரிஞ்சி இலை – ஒன்று,

நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மசாலா குஸ்கா
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி பச்சை மிளகாய், புதினா, கொத்த மல்லித் தழை ஆகிய வற்றை வதக்கி… மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். 

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்து… அரைத்து வைத்த வெங்காயம் – தக்காளி விழுது மற்றும் இஞ்சி – பூண்டு விழுது, சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

இதனுடன் அரிசி, பால் சேர்த்து நன்கு கிளறி, தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும், ‘வெயிட்’ போட்டு, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, 10 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும்.

இதற்கு, ஆனியன் ராய்தா மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் சூப்பர் காம்பினேஷன்.
டோனியை பின்னால் இறக்கியது ஏன்? - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி !
குறிப்பு 

சர்க்கரை நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அரிசி உணவுகளை குறைத்து உண்ணலாம். 

அரிசி உணவில் இருக்கும் சத்துக்கள் தேவைக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவை அப்படியே ரத்தத்தில் சேர்ந்திடும். இதனால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். 

இவர்கள் செரிமானத்திற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிற சாமை, தினை போன்றவைகளை எடுக்கலாம்.
Tags: