ப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி?





ப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி?

நட்ஸ் வகைகளை அதிகமாக உண்ணும் போது அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். அதிகமாக  நட்ஸ் வகைகளை சாப்பிடும் போது அது உங்களுக்கு ஒவ்வாமை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். 
ப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி?
தினமும், 100 கிராம் முதல் கால் கிலோ வரைகூட சிலர் நட்ஸ் கொறிக்கின்றனர். இது தவறு. நட்ஸ் வகைகள் கலோரி நிறைந்தவை. 

நட்ஸ் நல்லது என்பதைக் கேள்விப்பட்டு, ஒரே நாளில் நூறு கிராம் நட்ஸ் உண்பதும், பிறகு ஒரு மாதத்துக்கு நட்ஸ் சாப்பிடாமல் இருப்பதும் நல்லது அல்ல.
தேவையானவை :- 

மைதா – 2 கப்,

பாதாம் முந்திரி பிஸ்தா – தலா அரை கப் ,

கிஸ்மிஸ் – கால் கப் ,

டூட்டி ஃப்ரூட்டி – அரை கப்,

பேரீச்சை – 8.

போரா – ஒரு டேபிள் ஸ்பூன்,

உப்பு – 1 சிட்டிகை,

சீனி – ஒரு டீஸ்பூன்.

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை :- 

மைதாவில் உப்பு சீனி சேர்த்து கெட்டியாகப் பிசைந்து எண்ணெயில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஃப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல்
டூட்டி ஃப்ரூட்டி, பொடித்த பாதாம் பிஸ்தா முந்திரி, கிஸ்மிஸ், பொடியாக நறுக்கிய பேரீச்சையுடன் போராவும் போட்டு கலந்து வைக்கவும்.

மைதாவை மெல்லிய பூரிகளாக திரட்டி இந்தக் கலவையை உள்ளே பரப்பி உருட்டி ஓரங்களை ஒட்டி முறுக்கி விடவும். காயும் எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்துப் பரிமாறவும் ட்ரைட் ஃப்ரூட்ஸ் & நட்ஸ் முதுமையைத் தடுக்கிறது.

அசைவம் சாப்பிடாதவர்களுக்கு இந்தக் கொட்டைகள் மற்றும் உலர் பழங்கள் அசைவத்துக்கு ஈடான புரதத்தை அளிக்கின்றன. பாதாமில் நல்ல கொழுப்பு இருக்கின்றது. இரும்புச் சத்தை உடல் கிரஹிக்க உதவுகின்றது.

கலோரி அதிகமுள்ள ஆரோக்கியமான சமச்சீர் உணவாகவும் ஆகின்றது. பாதாமில் உள்ள கால்சியம் குழந்தைகளின் பல் எலும்பு நரம்பு மற்றும் தசை வளர்ச்சிக்கும் உதவுகின்றது.
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான 10 அறிகுறிகள் !
பாதாமில் இருக்கும் மாங்கனீஸ் தைராய்டு செயல் பாட்டை சீராக்குது. உறுதியான எலும்பு வளர்ச்சி யையும் உருவாக்குது. குடலில் உணவு எளிதில் ஜீரணமாக உதவுது.
முந்திரி மற்றும் பிஸ்தாவில் உள்ள காப்பர் சத்து உடலுறுப்புகள் இலகுவாக செயல்பட உதவுகின்றது. முந்திரியில் இருக்கும் பாஸ்பரஸ் காயம்பட்டு ரத்தம் வெளியேறும் போது அதிகம் ரத்தம் வெளியேறாமல் உறைய வைக்க உதவுது.

பேரீச்சை குழந்தைகளுக்கு உடல் ஊட்டத்தை அளிக்கக் கூடியது. இரத்த சோகையையும் போக்குது. கிஸ்மிஸ் மலச்சிக்கலைப் போக்குகின்றது. 

இவை அனைத்தும் சேர்த்து குழந்தைகளுக்கு எனர்ஜி அளிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அளித்து மூளை வளர்ச்சிக்கும் உதவுது.
Tags: