அரபி சாப்பாடு... கப்ஸா ரெசிபி தயாரிப்பது எப்படி?





அரபி சாப்பாடு... கப்ஸா ரெசிபி தயாரிப்பது எப்படி?

நம்மூரில் எப்படி பிரியாணி, நெய் சோறு பிரபலமோ, அதே போல் சவுதியில் அவர்களின் பாரம்பரிய உணவு கப்ஸா தான். சவுதியில் கப்ஸா என்றும், மற்ற வளைகுடா நாடுகளில் மந்தியென்றும் அழைக்கிறார்கள். 
அரபி சாப்பாடு... கப்ஸா ரெசிபி தயாரிப்பது எப்படி?
சவுதியில் மந்தி என்றால் மட்டனுடன் வேறு வகையில் செய்யப்படும் ஒரு உணவு..  இந்த கப்ஸா கடைகளில்ரெம்பவும் பேமஸ் ஆனது அல் புகாரியா கப்ஸா ரெஸ்ட்டாரண்டுகள் தான். 

ஒருங்கிணைந்த ரஷ்யாவை சார்ந்த முஸ்லிம்களால் நடத்தப் பட்டது. ரியாதில் மலாஸ் ஏரியாவில், அப்துல்லா ஸ்ட்ரீட்டில் இருக்கும் கடை ரெம்பவும் பிரசித்தமானது. 

மதியம் 2 மணிக்கு இதை வாங்க கூட்டம் அலை மோதும். 1/4 fried chicken உடன் கப்ஸா, சாலட், தக்காளி சட்னி, இன்னும் சிக்கன் சூப் இவைகள் அனைத்தின் விலையோ வெறும் 5 ரியால்கள் மட்டுமே. 

இரண்டு பேர் தாரளமாக சாப்பிடலாம். 1/2 கோழியுடன் 8 ரியால்கள் மட்டுமே..இப்பொழுது விலை தெரியவில்லை.. இந்த கப்சாவிற்கென தனியாக அரிசி இருக்கிறது.

அதுவும் நம்ம இந்தியாவிலிருந்து தான் வருகிறது..அல் முகைதிப் என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ள பஞ்சாப்பில் சொந்த இடத்தில் விளைவித்து இறக்குமதி செய்கிறார்கள். 
இங்கு நமக்கு அந்த ரகம் கிடைக்காது. இதற்கு மாற்றாக,நாம் வாசனை குறைந்த பாஸ்மதி அல்லது சாதா பொன்னியை உபயோகித்து செய்யலாம். 

உண்மையில் டேஸ்ட் அபாரம் போங்க.. இதை சுலபமான முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை

பாஸ்மதி அரிசி - 4 கப் 

ஃபிரஸ் கோழி - 2 

குங்குமப்பூ - தேவை யான அளவு 

பட்டை. ஏலம். லவங்கம். பிரிஞ்சி யிலை. கிராம்பு. முந்திரி திராட்சை காய வைத்த எழும்பிச்சை [இங்கு ரெடிமேடாக கிடைக்கும்] 

உப்பு நெய் - கொஞ்சம்

செய்முறை

முதலில் ஒரு கோழியை நான்கு பீஸாக்கி நன்றாக சுத்தம் செய்து, அதை ஒரு பத்திரத்தில் [சிறிது வேண்டுமெனில் ஆயில் விட்டு]. பட்டை. ஏலம். லவங்கம். பிரிஞ்சியிலை.
கப்ஸா அரபி சாப்பாடு
காய்ந்த எழும்பிச்சை போட்டு அதில் தேவை யான தண்ணீர் விட்டு அதில் கோழியும் உப்பும் போட்டு வேக வைக்கவும்.  வேகும் போது அசடு போல் மேல் வரும் அதை ஒரு கரண்டி யால் எடுத்து விடவும். 

[அது வேஸ்ட் கொழுப்பு] கோழி வெந்தததும் அதை எடுத்து குங்குமப்பூ போட்டு இதே போல் வைத்துக் கொள்ளவும்  

ஒரு அகன்ற பாத்திரத்தில் சிறு நெய் விட்டு சூடானதும் அதில் கோழி வேக வைத்த தண்ணீர் இருக்கு மல்லவா அதை அரிசி கணக்கின் படி அளந்து ஊற்றவும்.
மிக்சி வாங்குவதற்கான வழிகாட்டி !
அந்த தண்ணீரில் கழுவிய அரிசியை போடவும். அதில் சிறு குங்குமப் பூவோ அல்லது கலரோ சேர்க்கலாம். அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். 

சிறுது நேரம் கழித்து திறந்து சோறு உடைந்து விடாதவாறு கிளறி விட்டு. அதன்மேல் கோழிகளை அலங்க ரிக்கவும். அதன் மேல் முந்திரி திராட்சை வறுத்துக் கொட்டவும். இப்போது கமகமக்கும் கப்ஸா ரெடி. 

இது எவ்வித மசாலாக் களும் இல்லாத மிகுந்த சுவை தரக்கூடிய ஒரு அரபி சாப்பாட்டு. சாப்பிட சாப்பிட வாசமும் மணமும் இன்னும் கேட்டுக் கொண்டே யிருக்கும்.
கப்ஸா
[இந்த சாப்பாட்டின் ருசியே கோழி வேக வைத்த தண்ணீரில் செய்வது தான்] இதற்கு சைடிஸ். தக்காளி. 

பச்சை மிளகாய். பொதினா. உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து சட்னி செய்துக் கொள்ளவும் கூடவே எழும்பிச்சை வெள்ளரி கேரட். முள்ளங்கி இலை. 

வெள்ளை வெங்காயம் இவைகளை பச்சை சாலட் செய்து கடித்துக் கொள்ள வும் [அச்சோ நாக்கை யல்ல பச்சை சாலடை]
Tags: