ரவா நாம் வெறுக்கும் ஒரு உணவாக இருந்தாலும் உண்மையில் ரவா நாம் அறியாத பல நன்மைகளைக் கொண்டுள்ளது. உண்மையில் சிறந்த காலை உணவு எதுவென்று நீங்கள் தேடினால் அது சந்தேகமே இல்லாமல் ரவைதான்.
ரவை இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ரவையில் செலினியம் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது இதயத்தை நோய்த்தொற்று களிலிருந்து பாதுகாக்கும். ரவை இதயத்தையும் நல்ல நிலையில் வைத்திருக்கும்.
சுவையான கேப்பை இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?
இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவற்றை தடுக்கிறது. ரவை உங்களை நிறைவாக வைத்திருக்கிறது மற்றும் ஒருவர் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.
சுருக்கமாக சொல்வதென்றால், இது குறுகிய காலத்தில் உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. சரி இனி ரவை பயன்படுத்தி டேஸ்டியான ரவை பொங்கல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானப் பொருள்கள் . :
ரவை - 2 கப்
பச்சைப் பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க . :
நெய் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை
ஆண்டி ஏஜிங் ட்ரிங்க் குடிப்பதால் சரும அழகு கூடும் !
செய்முறை:
முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ரவையைப் போட்டு சூடு வர வறுத்துக் கொள்ளவும்.
அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவி விட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.
மீண்டும் வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள் களைத் தாளித்து, ஒரு கப் ரவைக்கு இரண்டேகால் கப் தண்ணீர் என ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி விட்டு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.
பச்சைப் பருப்பு ஏற்கனவே வெந்திருப்ப தால் அதற்கு சேர்த்து தண்ணீர் ஊற்ற வேண்டாம். தண்ணீர் கொதி வந்ததும் தேவை யான உப்பு,வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.
மீண்டும் ஒரு கொதி வந்ததும் ரவையை சிறிது சிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். ரவை முழுவதை யும் சேர்த்த பிறகு, நன்றாகக் கிளறி விட்டு அடுப்பி லிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.
இந்த சூட்டிலேயே ரவை வெந்து விடும். நீண்ட நேரம் அடுப்பி லேயே இருந்தால் ரவை பொங்கலுக்குப் பதில் ரவை உப்பு மாவாக மாறி விடும்.
இப்போது ரவை பொங்கல் தயார். இது நல்ல வாசனையாகவும், சுவையா கவும்,எளிதில் செய்யக் கூடியதாகவும் இருக்கும். இதற்கு தேங்காய் சட்னி தான் மிகப் பொருத்தம்.சாம்பாரும் நன்றாக இருக்கும்.