ருசியான காளான் சூப் செய்வது எப்படி?





ருசியான காளான் சூப் செய்வது எப்படி?

காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 
காளான் சூப்
அதே போல, காளானை நன்றாக சமைத்தபிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

அமெரிக்காவில், கிழக்கிலும் மேற்கிலும் காணப்படும் அமானிட்டா பைசிப்போரிகெரா (Amanita bisporigera), அமானிட்ட ஓக்ரியேட்டா(A. ocreata) போன்றவை பார்க்க வெள்ளையாய் இருந்தாலும் மிகவும் நச்சுத்தன்மை உடையவை. 
காளான்கள் சிடின் மற்றும் பீட்டா - குளுக்கனின் நல்ல மூலமாகும், இது கொழுப்பை குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

காளானில் எந்த புள்ளிகளும், கோடுகளும் இல்லாமல், உறுதியாக இருக்கும் காளான்களை தேர்ந்தெடுங்கள். காளான்கள் நடுத்தர அல்லது பெரிய அளவில் இருக்க வேண்டும். 

நீங்கள் அவற்றை வாங்கும்போது அவை மெலிதாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

பட்டன் காளான் - 2 அ 3 

உடைத்த மக்காச்சோளம் - 1 Tbsp 

மெல்லியதாக அரிந்த முட்டைகோஸ் - 1 Tbsp 

காரட் துண்டுகள் - 1 Tsp 

பச்சை பட்டாணி - 2 Tsp 

மெல்லியதாக அரிந்த வெங்காயம் - 2 Tsp 

மெல்லியதாக அரிந்த பூண்டு - 1 Tsp 

மெல்லியதாக அரிந்த இஞ்சி - 1 Tsp 

பச்சை மிளகாய் ( தேவையானால் ) - 1 

அலங்கரிக்க :

மிளகு பொடி - 1/2 Tsp 

கொத்த மல்லி - தேவையான அளவு.

வெங்காயத் தாள் - தேவையான அளவு.

செய்முறை :
காளானை தண்ணீரில் கழுவி தனியே எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை சூடு படுத்தவும். இலேசான சூடு வந்ததும் காளான் தவிர கொடுக்கப் பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.

சின்ன தீயில் வேக விடவும். உடைத்த மக்காசோளம் நன்கு மலர்ந்து வெந்ததும் காளானை பொடியாக நறுக்கி சேர்க்கவும். காளான் ஒரு நிமிடத்தி லேயே வெந்து விடும். அடுப்பை அணைத்து விடவும்.

இப்போது உப்பு சேர்த்து கலக்கவும். சூப் கிண்ணத்தில் ஊற்றி அலங்கரித்து மிளகுதூள் தூவி பரிமாறவும். குளிர் கால மாலை வேளையில் அருந்துவதற்கு ஏற்ற பானமாகும்.
குறிப்பு 

போதை காளான் (Magic Mushroom) என்ற போதை தரும் காளான் விற்பனை கொடைக்கானலில் அதிக அளவில் பெருகி வருகிறது Psilocybin என்கின்ற ஒரு வேதிக் கலவைகள் நிறைந்த இந்த காளான்கள் கொடைக்கானலில் அதிக அளவில் விளைகிறது.
Tags: