அருமையான பீட்ரூட் அசோகா அல்வா செய்வது எப்படி?





அருமையான பீட்ரூட் அசோகா அல்வா செய்வது எப்படி?

0
பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடுவது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 
பீட்ரூட் அசோகா அல்வா
செரிமான மண்டலத்தில் அதிக ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இருந்தால் நோய் எதிர்ப்பு மண்டலமும் வலுப்பெறும். இதன் மூலம் நோய்வாய்ப் படுவதற்கான அபாயத்தையும் குறைக்கலாம். 

ருசியான கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி?

பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகம் உள்ளதால் இது அவர்களுக்குப் பெரிய அளவில் உதவுகிறது. அதிலும் வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடித்தால், மிகவும் நல்லது. 

பீட்ரூட்டிலுள்ள நைட்ரேட்ஸ், ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கக் கூடாது. 

இருப்பினும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இயற்கையாகவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அல்லது ஏற்கனவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க மருந்துகளை உட்கொள்பவர்கள் பீட்ரூட் ஜூஸைக் குடிக்கக் கூடாது. 

சரி இனி பீட்ரூட் பயன்படுத்தி டேஸ்டியான பீட்ரூட் அசோகா அல்வா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

மருத்துவ குணம்மிக்க பூண்டு மிளகு பால் செய்வது எப்படி?

தேவையானவை:

பீட்ரூட் – ஒரு கிலோ,

சர்க்கரை – 250 கிராம்,

நெய் – 100 கிராம்,

ஏலக்காய்த் தூள், – ஒரு டீஸ்பூன்,

முந்திரி – 10,

கோவா – 100 கிராம்,

பயத்தம் பருப்பு – 100 கிராம், 

கோதுமை மாவு – 5 டீஸ்பூன்.
செய்முறை:

பீட்ரூட்டைத் தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ள வும். இதனை 50 கிராம் நெய்யில் சுருள வதக்கி, ஒரு டம்ளர் நீர் விட்டு வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும். 

பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து, குழைவாக வேக விடவும். கோதுமை மாவையும் வெறும் வாணலியில் வறுத்து பயத்தம் பருப்பில் சேர்த்து வேக விடவும்.
பிறகு, சர்க்கரையை சேர்த்து, கோவாவை உதிர்த்துப் போடவும். இடை இடையே நெய் சேர்க்கவும். வேக வைத்த பீட்ரூட்டை இதில் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய்த் தூள், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கினால்… 

பீட்ரூட் அசோகா அல்வா தயார்.

குறிப்பு:

ரத்த சோகை குணமாகவும், ரத்தம் விருத்தி அடையவும் பீட்ரூட் மிகவும் உதவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)