பசலைக்கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி?





பசலைக்கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி?

0
நம்முடைய வாழ்வில் இயற்கை நமக்கு பல்வேறு அற்புதங்களை வழங்குகிறது. அவற்றில், நாம் உண்ணும் உணவு பொருட்களும் முக்கியமானவை. அப்படியான உணவு பொருட்களில் ஒன்று தான் பசலைக்கீரை. 
பசலைக்கீரை முட்டை பொரியல்

ஆம், இந்த பசலைக் கீரையில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை கொடுக்கின்றன. அதிலும், கோடை காலத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பசலைக்கீரை இருக்கிறது. 

இந்த கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளும் ஒரு சிறப்பான உணவு பொருளாகவும். 

பசலைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை என்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது ஆரோக்கியம் அதிகரிக்க செய்யும். 
பசலைக் கீரையில் விட்டமின் சி, வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ போன்றவை அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகள், சுவாசக் கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.  

மலச்சிக்கல், தொந்தி  மூத்திரக் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை படுதல் போன்றவற்றுக்கும் இந்தக் கீரை சிறப்பான மருத்துவ பொருளாகும். 

ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும். அது மட்டுமின்றி, உடல் சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. இது மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது.

எப்போதும் ஒரே போன்று முட்டைப் பொரியல் செய்து சுவைத்து போர் அடித்து விட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பசலைக் கீரையைப் பயன்படுத்தி முட்டைப் பொரியல் செய்து சுவையுங்கள்.

இது நிச்சயம் வித்தியாச மான சுவையில் இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியவாறும் இருக்கும். சரி, இப்போது பசலைக் கீரை முட்டை பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போம். 

அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை – 2 கப் (நறுக்கியது)

முட்டை வெள்ளைக்கரு – 4

மெஸரெல்லா சீஸ் – 3 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகுத் தூள் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பசலைக் கீரையைப் போட்டு நன்கு மென்மை யாகும் வரை வதக்க வேண்டும். 

பின் அதில் சீஸை சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின்பு முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கிளறி,  உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி பிரட்டி இறக்கினால், பசலைக் கீரை முட்டை பொரியல் ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)