தேங்காய் எண்ணெயின் பயன்கள் !





தேங்காய் எண்ணெயின் பயன்கள் !

இன்றைய நவீன உலகில் பலரு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தலை‌யி‌ல் தே‌ய்‌ப்பதே இ‌ல்லை. தலை முடி ஒ‌ட்டி‌க் கொ‌ண்டு முக‌ம் அழுது வ‌ழியு‌ம் எ‌ன்பதே பலரும் முன் வைக்கும் காரணமாகும்.
தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய்
ஆனா‌ல், தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌ப் போ‌ன்று உடலு‌க்கு ந‌ன்மை செ‌ய்யு‌ம் ஒரு பொரு‌ள் வேறு எதுவுமே இ‌ல்லை எ‌ன்று கூறலா‌ம். 
மூங்கில் அரிசியின் பயன்கள் !
தலை‌க்கு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது. தலை‌யி‌ன் தோ‌ல் பகு‌தியை வற‌ண்டு ‌விடாம‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் பாதுகா‌க்கு‌ம்.

மேலு‌ம், கு‌ளி‌ப்பத‌ற்கு மு‌ன்பு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை உட‌ல் முழுவது‌ம் பூ‌சி‌க் கொ‌ண்டு ஊற‌ வி‌ட்டு‌க் கு‌ளி‌க்கலா‌ம்.

இது தோலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது. அ‌திகமாக மே‌க்-அ‌ப் போடு‌ம் பெ‌ண்க‌ள், இர‌வி‌ல் மு‌க‌த்தை சு‌த்த‌ம் செ‌‌ய்து‌ வி‌ட்டு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தட‌வி‌க் கொ‌ண்டு படு‌க்கலா‌ம்.

இதனா‌ல் சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்ல பொ‌லிவு ‌கிடை‌க்கு‌ம். பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படை யான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். 

வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது. 

வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.
மருந்தாகும் உணவு வகைகள்… சில டிப்ஸ்... !
புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவி யாக இருப்பது தேங்காய் எண்ணெய். 
தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்து
தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காத வர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.

உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.

தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்த லாம். நல்ல பலனை அளிக்கும்.
நோயில்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க இந்த கீரை சாப்பிடுங்க !
தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு தேயுங்கள்.

சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கி விடும். சளித் தொந்தரவு உள்ளவர்கள்,

தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெது வெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

 வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.
Tags: