வெயிலை சமாளிக்க ஜில்லுன்னு சாப்பிடுங்க !





வெயிலை சமாளிக்க ஜில்லுன்னு சாப்பிடுங்க !

வாங்க இந்த வெயிலை சமாளிக்க எந்த மாதிரி உணவுகளை எடுத்து கொண்டால் உடலை பாதுகாக்கலாம் என்று பார்ப்போம். பொதுவாக கோடை கலத்திற்கு ஏற்ற உணவு எளிதாக இருக்க வேண்டும்.
வெயிலை சமாளிக்க ஜில்லுன்னு சாப்பிடுங்க
அதிலும் சைவ உணவு அரை வயிருக்கு தான் சாப்பிட வேண்டும். மேலும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது ஏனெனில் அது நமது உடலின் வெப்ப நிலையை அதிகரித்து விடும்.

மேலும் அசைவ உணவுகளில் பாக்டீரியாக்கள் எளிதில் தோன்றி உணவு பொருளை விசதன்மை யாக மாற்றி விடும். இந்த உணவை உண்ணும் போது வாந்தி மயக்கம் ஏற்படும்.
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் !
சிலருக்கு வயிற்றில் இரைச்சல் ஏற்படும்.  இதனால் இந்த மாதிரி உணவு வகைகளை குறைத்து கொள்வது நல்லது. மேலும் கார உணவு களையும் எண்ணையில் வதக்கிய உணவு பொருள் களையும் தவிர்ப்பது நல்லது. 

இவை சருமத்திற்கு தொல்லை தரும். அது மட்டுமின்றி அஜீரண கோளாறு களையும் ஏற்படுத்தும். சிலர் தானிய வகைகளை எடுத்துக் கொள்வர், அவ்வாறு உட்கொள்ப வர்கள்.
இந்த வெயில் காலத்தில் மட்டும் கேழ்வரகை குறைத்து கம்பு போன்ற தானியங் களை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் செல்லும் போது சருமத்தை பாதுகாக்க சன்ஸ்க்ரீம் பயன்படுத்துங்கள். அதே போல கொளுத்தும் வெயிலில் உடலை ஈர்ப்பத்ததுடன் வைத்திருக்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 

மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை கோடை காலத்தில் உட்கொள்வது உங்கள் உடலை குளிர்ச்சிப்படுத்த உதவும்.  

இந்த கோடை காலத்தில் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்பதால் நன்மையே தவிர, அதில் எந்த தீமையும் இல்லை. 

இருந்தாலும் அசுத்தங்கள் படிந்து நம் சருமத்தில் அலர்ஜி ஏற்படும் என்பதால் அடிக்கடி குளித்தல் நல்லது. முக்கியமாக வியர்வை உலர்ந்த பின்பு குளிக்க வேண்டும்.

கீரைகள் நல்லது உடாளுக்கு குளிர்ச்சி தரும் கீரைகள் மற்றும் நீர் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். 
காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி சாறு மற்றும் வாழைத்தண்டு சாறு குடிப்பது மிகவும் நல்லது. அது உடலில் உள்ள நீர் நன்கு அனைத்து பாகங்களு க்கும் பிரிந்து செல்ல உதவும்.

மேலும் நாம் தினமும் பருகும் நீரின் அலவை விட சற்று அதிகமா பருக வேண்டும், இளநீர், நீர் மோர், நீர் சத்துள்ள பழ வகைகளை அதிகம் எடுத்து கொண்டு நாமும் நமது உடலை பாதுகாப்போம் நண்பர்களே..
Tags: