காஃபி குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் என்ன?





காஃபி குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் என்ன?

0
பரபரப்பான பணி நேரத்தில் சூடாக அருந்தும் ஒரு கப் காஃபிக்கு ஈடு இணையே இல்லை. அதன் வாசனை நம் மூளையைச் சுறுசுறுப்பாக்கி பணியை மீண்டும் தொடங்க புத்துணர்ச்சி தரும்.
காஃபி குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் என்ன?
இது வெறும் புத்துணர்ச்சிக் கானது மட்டுமல்ல, இதில் உடல் ஆரோக்கி யத்திற்கும் பல நன்மைகளை இருக்கின்றன.
தசை வலிகளை நீக்கும்:

ஜார்ஜியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காஃபி குடிப்பதால் தசை வலிகள் நீங்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. நாள்பட்ட தசை வலியால் அவஸ்தைப் படுவோர் காஃபி அருந்தலாம்.

நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவும்:

ஹார்வர்ட் மருத்துவர் ஃப்ராங்க் ஹு ( Harvard’s Dr Frank Hu ) என்பவர் அர்ச்சீவ்ஸ் ஆஃப் இண்டர்னல் மெடிசனில் வெளியிட்டுள்ள ஆய்வில், ஒரு நாளைக்கு ஆறுக்கும் மேற்பட்ட காஃபி குடிப்பதால்,

இரண்டாவது வகை நீரிழிவு நோயை 22 சதவீதமாகக் குறைக்க உதவும் என்று கூறியுள்ளார். 

தினமும் ஒரு கப் குடிப்பதால் 9 முதல் 6 சதவீதம் குறையும் எனவும் குறிப்பிட் டுள்ளார்.
மறதியைக் குறைக்கும்:

க்ரெம்பல் என்னும் மூளைக்கான கல்வி அமைப்பு காஃபி குடிப்பதால் ஞாபக மறதி நோய் ஏற்படுவதைத் தடுக்க உதவும் எனவும், இதனால் காஃபி அருந்துங்கள் எனவும் பரிந்துரைக்கிறது.

மனஅழுத்தத்தை குறைக்க உதவும்:
மனஅழுத்தத்தை குறைக்க உதவும்
ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வில் 4 காஃபிக்கு மேல் குடித்தால் 20 சதவீதம் மனஅழுத்தம் குறையும் என்று கண்டறிந் துள்ளது. 

அதே சமயம் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங் களையும் குறைக்கும் என்று குறிப்பிடுகிறது.

மூளை செயலிழப்பதைத் தடுக்க உதவும்:

ஜர்னல் ஆஃப் நியூராலஜி வெளியிட்டுள்ள ஆய்வின்படி, நான்கு கப் காஃபி மூளை செயலிழத்தல் பிரச்னை மற்றும் 

தண்டுவடம் செயலிழத்தல், திசுக்களின் இறுக்கம் போன்ற பிரச்னை களைக் குறைக்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)