அதிகபட்ச நன்மைக்காக தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். நீங்கள் தினமும் காலையில் 1-2 நெல்லிக்காய்களை சாப்பிடலாம்.
வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பதால் ஒரு நாளைக்கு 2-க்கு மேல் சாப்பிட வேண்டாம். நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
ஆனால் ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடக் கூடாது. நெல்லிக்காயில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதில் தவறில்லை தான்.
அதே சமயம், குறைந்த சர்க்கரை பிரச்சினை உள்ளவர்கள் இதை சாப்பிடக் கூடாது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.
இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏதேனும் நோய் அல்லது பிரச்சனை ஏற்பட்டால் இதை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரை அணுகி பயன்பெறுவது நல்லது.
நெல்லிக்காய் பொடி - நீங்கள் ஆம்லாவை தூள் வடிவில் உட்கொள்ளலாம், நீங்கள் செய்ய வேண்டியது 1 தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை 1 டீஸ்பூன் தேன் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்று நெல்லிக் காயில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் – 5,
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
துவரம் பருப்பு வேக வைத்த நீர் – ஒரு கப்
பொடி செய்ய:
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு,
சுவையான பிரெட் கட்லெட் செய்வது எப்படி?
தனியா – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
நெய் – சிறிதளவு.
தாளிக்க:
எண்ணெய், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
பொடி செய்யக் கொடுத்துள்ள வற்றை, சிறிதளவு நெய்யில் வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்.
நெல்லிக் காயை கொட்டை நீக்கி துருவிக் கொள்ளவும்.
துருவிய நெல்லிக் காயுடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்த பின்னர் பருப்பு வேக வைத்த நீர் விட்டு… வறுத்து அரைத்த பொடி, நெல்லி – இஞ்சி விழுது சேர்த்து,
உப்பு போட்டு ஒரு கொதி விட்டு கொத்த மல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும் (விருப்பப் பட்டால், இறக்கிய பிறகு எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.)
சத்தான நெல்லிக்காய் பருப்பு ரசம் ரெடி.