அருமையான கொத்தமல்லி பச்சடி செய்வது எப்படி?





அருமையான கொத்தமல்லி பச்சடி செய்வது எப்படி?

0
உங்களுடைய தினத்தை கொத்தமல்லி விதைகள் ஊற வைத்த தண்ணீருடன் ஆரம்பியுங்கள். இதற்கு நீங்கள் முதல் நாள் இரவே ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கொத்தமல்லி விதைகளை ஒரு பெரிய டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். 
அருமையான கொத்தமல்லி பச்சடி செய்வது எப்படி?
காலை எழுந்ததும் முதல் வேலையாக இந்த தண்ணீரை பருகுங்கள். இது உங்களுடைய செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். 

கொத்தமல்லி விதை தேநீர் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை ஒரு கப் தண்ணீரில் 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து கிடைக்கக்கூடிய கஷாயத்தை வடிகட்டி வெதுவெதுப்பாக பருகவும். 

உணவு சாப்பிடுவதற்கு முன்பு இந்த தேநீரை பருகுவது உங்களுடைய பசியை கட்டுப்படுத்தி, செரிமானத்தை அதிகரிக்கும். 
கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். இதனை நீங்கள் சமைக்கும் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தலாம். 

காய்கறி பொரியல் அல்லது சமைத்த தானியங்கள் எதுவாக இருந்தாலும் அதில் இந்த பொடியை சிறிதளவு தூவி சாப்பிடுவதன் மூலமாக உணவின் சுவையும் மேம்படும், உங்களுடைய உடல் எடையும் குறையும்.

கொத்தமல்லி விதைகளை சூப்புகளில் சேர்ப்பதன் மூலமாக அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்து மேம்படுகிறது. மேலும் சூப்புக்காக தயாரிக்கும் காய்கறி கூழில் கொத்தமல்லி விதை பொடியை சேர்த்தும் சூப் தயாரிக்கலாம்.
தேவையானவை:

துவரம் பருப்பு – அரை கப்,

மல்லித்தழை – பெரிய கட்டாக 1,

பெரிய வெங்காயம் – 1,

தக்காளி – 1,

பச்சை மிளகாய் – 2,

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்,

புளி – சிறு நெல்லிக்காய் அளவு,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு.
தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வேக வையுங்கள். மல்லித் தழையை சுத்தம் செய்து, வேர் நீக்கி இளங்காம்பாக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 

வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். 
எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் முக்கால் பாகம் மல்லித் தழை, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். 

பிறகு, புளிக் கரைசலை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூளையும் போட்டு, சிறு தீயில் பச்சை வாசனை போகக் கொதிக்க விடுங்கள். 

பச்சை வாசனை போனதும் துவரம் பருப்பையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். மல்லி மணத்துடன் கமகமக்கும் இந்தப் பச்சடி, எந்த உணவுக்கும் ஏற்ற சூப்பர் ஜோடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)