அசத்தலான அகத்திக்கீரை சாம்பார் செய்வது எப்படி?





அசத்தலான அகத்திக்கீரை சாம்பார் செய்வது எப்படி?

0
உடம்பிற்குள் உள்ள சூட்டை தணிக்கக் கூடியதால் தான், இதற்கு அகத்திக்கீரை என்றே பெயர் வந்தது. ஒரு பொருள் மலிவாக கிடைத்தாலே, அதற்கு பெரிதாக மனிதர்கள் மதிப்பு தருவதில்லை. 
அசத்தலான அகத்திக்கீரை சாம்பார் செய்வது
அப்படிப்பட்டது தான் இந்த அகத்திக்கீரை. அகத்தில் உள்ள நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் நிறைந்த கீரை இது.. எல்லா காலத்திலும் வற்றாமல் கிடைக்கக ்கூடியது. விலையோ குறைவானது. 

பிரசவித்த தாய்மார்களுக்கு, உடம்பில் சூடு சேர்ந்து விடும். அதே போல, கால்சியம், இரும்புச் சத்துக்களும் குறைந்து விடும். 
அதனால் தான், இந்த அகத்திக் கீரையை குழந்தை பெற்ற பெண்களுக்கு கட்டாயம் சமைத்து தருவார்கள். எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதித் தன்மையை தரக்கூடியது.. தாய்ப்பால் பெருகும். 

அகத்திக்கீரை சாப்பிட்டால், பால் வளம் பெருகும் என்பதால் தான், ஆடு, பசு போன்ற கால்நடைகளுக்கும் தீவனமாக தரப்படுகிறது. மற்ற கீரைகளை போல, இந்த கீரையில் உள்ள சத்துக்களை லிஸ்ட் போட முடியாது. 

காரணம், 50-க்கும் மேற்பட்ட உயிர்ச்சத்துகள் இதில் அடங்கி உள்ளன. ஜஸ்ட் 100 கிராம் கீரையில், 90000 உயிர்சத்தான வைட்டமின்கள் இருக்கிறதாம். 2 வகையான அகத்திக்கீரை உள்ளது. 
ஒன்று வெள்ளை நிற பூக்களையும், இன்னொன்று சிவப்பு நிற பூக்களையும் கொண்டது. பெரும்பாலும் வெள்ளைநிற பூக்களை கொண்ட கீரையை தான் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். 

கிட்டத்தட்ட இதுவும் முருங்கை மரம் போலத்தான். இந்த மரத்தின் எல்லா பகுதிகளுமே மருத்துவ மூலிகைத் தன்மை கொண்டது.

தேவையானவை:

துவரம் பருப்பு - 100

அகத்திக் கீரை - அரை கிண்ணம்

வெங்காயம்- 2

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு - சிறிதளவு

பூண்டு - 8 பல்

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

சீரகத்தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
செய்முறை:

பருப்பை அலசி அத்துடன் பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகத்தூள், பாதி வெங்காயம் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து இறக்கி பருப்பை மசித்துக் கொள்ளவும். 

அகத்திக் கீரையை சிறிது தண்ணீரில் தனியாக வேக வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும். மீதி உள்ள வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும். 
அவற்றுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய்த் தூள், வெந்த பருப்பைச் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கிளறி கொதிக்க விடவும். 

ஒரு கொதி வந்ததும், அத்துடன் வேக வைத்த அகத்திக் கீரையைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான சத்தான அகத்திக் கீரை சாம்பார் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)