ஆட்டுக்கறி கொழுப்பு சாப்பிடலாமா? யார் யார் சாப்பிடலாம்? இந்த கொழுப்பு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? உடலுக்கு தீங்கு என்று சொல்லியே, சிலர் ஆட்டுக்கறியை ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் இந்த ஆட்டுக்கறியை தொடவே கூடாது.
நினைச்சுக்கூட பார்க்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால், உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாராக இருந்தாலம், மாதம் ஒருமுறையாவது, குறைந்த அளவில் மட்டன் சாப்பிட்டால், உடலுக்கு வலு கிடைக்கும்.
உடல் சூடு தணியும். சருமத்துக்கான பளபளப்பு கூடும். பார்வை கோளாறுகள் நீங்கும். அந்த வகையில், ஆட்டு கொழுப்புகளை எடுத்துக் கொண்டால், அபார ருசியை தரக்கூடியது.
அதனால் தான் மட்டன் வாங்கும்போது, கொழுப்புகளை கூடுதலாக கேட்டு வாங்குவார்கள். ஓட்டல்களில் சமைக்கப்படும் உணவுகளிலும், இந்த கொழுப்புகளை பயன்படுத்துவார்கள்.
இந்த கொழுப்பை நாம் சமைத்து சாப்பிடும் போது, உடலுக்கு வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை தருகிறது. நம்முடைய நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல வலிமையை கூட்டுகிறது.
இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?
தேவையான பொருட்கள் :
மட்டன் கொழுப்பு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 10
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மட்டன் கொழுப்பு, மிளகாய்த் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் அல்லது கொழுப்பு வேகும் வரை வேக விட்டு இறக்கவும்.
கொழுப்பு மட்டுமே சேர்த்து செய்யும் இந்தக் கறி, சுவையாக இருக்கும். இட்லியுடன் பரிமாறவும்.
குறிப்பு :
கொழுப்பில் இருந்து அதிகம் எண்ணெய் பிரியும் என்பதால், தாளிக்க குறைந்த அளவு எண்ணெய் சேர்த்தால் போதும். வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த குழம்பை சாப்பிட வேண்டாம்.