இன்றைய நவீன அவசர வாழ்வுக்குத் தகுந்ததாக இருக்கிறது Ready to Eat என்கிற உடனே சாப்பிடத் தகுந்த உணவுகள்.
சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஃபுட் கோர்ட்டு களிலும் விதவிதமான இந்த ரெடிமேட் உணவுகள் நம்மை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான பாக்கெட்டு களில் இருப்பதைப் பார்க்கிறோம்.
அவற்றை வாங்கி வந்து வீட்டிலும் அடுக்கி விடுகிறோம். ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வைத்துக் கொண்டால், எப்போது வேண்டுமோ, உடனே எடுத்து வெந்நீர் அல்லது பால் கலந்து அப்படியே எடுத்து சாப்பிடலாம்.
சமைப்பதும் எளிது... சுவையும் அதிகம் என்பதால் இதனை பலரும் விரும்புகி றார்கள். ஆனால், இத்தகைய ரெடிமேட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்து கிறார்கள் மருத்துவர்கள்.
உட்கார்ந்தே அமர்ந்து அதிக நேரம் வேலை செய்யும் இன்றைய இளைய தலைமுறை யினர் இந்த Ready to eat வகை உணவுகளையே அதிகம் விரும்பு கின்றனர்.
அதற்கு காரணம் கஷ்டப் படாமல் விரைவில் சமைக்கலாம், சமைக்கும் நேரமும் மிகவும் குறைவு என்பதாலும், அதிக ருசியாகவும் இருப்பதால் இந்த வகை உணவு களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.
இந்த உணவுகளுக்கு அடிமையாகி போனவர்கள் இதிலிருந்து மாறுவது மிகவும் கடினம். உடலில் பிரச்சனைகள் ஏற்படும் போது தான் விழித்துக் கொள்கிறார்கள்.
Ready to eat வகை உணவுகளை ஆரம்ப காலத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள், பேரழிவு காலங்களில் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுபவர்கள்,
மலையேற்ற வீரர்கள், நடைப்பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் வேட்டையாடு பவர்கள் பயன்படுத்தினர்.
ஆனால், எப்போதும் ஓடிக்கொண்டி ருக்கும் நகர மக்களிடையே இப்போது இந்த உணவுகள் இப்போது பிரபலமாகி விட்டன.
பிஸி ஷெட்யூலுக்கு நடுவே உணவை தவிர்க்க வேண்டிய சூழலில் இருக்கும் போது, தங்களுடைய பசியை சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லாதவர்களுக்கு வேண்டுமானால் ரெடிமேட் உணவுகள் வசதியாக இருக்கலாம்.
ஆனால் சினிமா, பார்க், பீச் என எங்கு சென்றாலும் அங்கே கடைகளில் விற்பதை வாங்கி சாப்பிடுவதோ, வெளியூரில் தங்கி யிருப்பவர்கள் சோம்பேறித் தனத்தால் இவற்றை சாப்பிடுவதோ தவறான
செயல்.
ஏனெனில், ஒன்று, முழுவதுமாக சமைக்காமல், பாதி சமைத்த உணவை அடைத்து விற்கிறார்கள் அல்லது நீண்டநாள் பாதுகாத்து வைக்கவும், ஃப்ரெஷ்ஷாக இருக்கவும்,
அந்த உணவுகளில் ரசாயனங்கள் கலந்த ப்ரசர்வேடிவ்ஸ் களை சேர்க்கிறார்கள். இது தவிர, தேவைக்கு அதிகமான உப்பு, சர்க்கரை, காரம், மசாலா வகை களையும் சேர்த்திருப்பார்கள்.
இதனால், இவற்றை அடிக்கடி உண்ணும் மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.