வெங்காயம் உடலில் ஏற்படுத்தும் நன்மைகள் !





வெங்காயம் உடலில் ஏற்படுத்தும் நன்மைகள் !

வெங்காயத்தின் தாவரவியல் பெயர் அல்லியம் சீபா. இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும் தண்டுள்ள சின்ன செடி ஆகும். தினந்தோறும் நம் வீட்டு சமையலில் வெங்காயம் இல்லாத ஒரு சமையல் இருக்காது.
வெங்காயம் உடலில் ஏற்படுத்தும் நன்மைகள்
வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாது. அவ்வாறு சமைத்தாலும் அதில் சாப்பாட்டில் ருசி இருக்காது. வெங்காயம் மனித உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது.
நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள் !
அதில் குறிப்பாக நம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க செய்வதும், வெங்காய சாறு பல்வேறு மருத்துவ நலன்களையும் தருகிறது. வெங்காய சாற்றை பயன்படுத்தி தலையில் தேய்த்து வந்தால் பொடுகு கூட வராது. 

வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்து கிறார்கள். பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகி றார்கள்.

பாக்டீரியா மற்றும் வைராஸ் ஏற்படும் காய்ச்சலை வெங்காயம் எளிதில் விரட்டி விடும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும் தான்.

வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அதனை பாதத்தின் அடியில் வைத்து, சாக்ஸ் அணிந்து கொண்டால் போதும் காய்ச்சல் பறந்து விடும். வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. 
வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய் புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிறைய உள்ளது.
வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேகவைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். ஆனால் பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும். 

சிறுநீரகப் பிரச்சினை முதல் உடல் எடை குறைவது, கொழுப்பைக் குறைப்பது வரை அத்தனை பிரச்சினைகளுக்கும் வெங்காயம் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்.

வெங்காயத்தில் வைட்டமின் E அதிகம் உள்ளதால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சினையை தடுக்கிறது. வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் எளிதாக கலக்கும் தன்மை கொண்டது. 

ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்னைகள் குணமாகும்.
Tags: