பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு. சில உணவு பொருட்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.
ஒமேகா-3 அமிலத்தை அதிகமாக உட்கொள்ளும் போது, மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறதாம்.
அது மட்டுமல்ல, கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 உள்ளது.
இதில் வைட்டமின்கள் பி5 மற்றும் பி6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் துத்தநாகம், நல்ல கொழுப்புகள், புரதச்சத்து என உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் இதில் உள்ளன.
கார்போ ஹைட்ரேட் இல்லாததால், உடல் எடையை குறைக்க இது மிகச்சிறந்த உணவாக இந்த அயிலை கருதப்படுகிறது. பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வரும் வாய்ப்பு குறையும்.
இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. சரி இனி அயிலை மீன் பயன்படுத்தி டேஸ்டியான அயிலை மீன் நாட்டு குழம்பு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை :
முழு அயிலை சுத்தம் செய்தது - 10
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 3 சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
பச்சை மிளகாய் (கீறியது) - 3
வெந்தயம் - 3 டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 4
கறிவேப்பில்லை - 1 கொத்து
மீன் மசாலா தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சல் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2டீஸ்பூன்
மல்லிப்பொடி - 2டீஸ்பூன்
புளி - பெரிய எலுமிச்சை அளவு தண்ணீரில் கரைத்து
புளி கரைசலை தயார் செய்யவும்.
தேங்காய்ப்பால் - 1 டம்ளர்
கொத்துமல்லி - 2 டீஸ்பூன்
வதக்கிய வெண்டைக்காய் (நறுக்கியது) -10
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும் எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து கொள்ளவும். அகன்ற பாத்திரம் சூடானவுடன் ஆயிலை ஊற்றி கடுகு சீரகம், வெந்தயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை நன்றாக வதக்கவும்.
அரைத்த பெரிய வெங்காயம் - தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கவும். மீன் மசாலா தூள், மஞ்சல் தூள், மிளகாய் தூள், மல்லிப்பொடி சேர்த்து வதக்கவும்.
புளி கரைசலை சேர்க்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். மீனை சேர்க்கவும். வெண்டைக்காயை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய வெண்டைக்காய் சேர்க்கவும்.தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
கொத்துமல்லி தூவி இறக்கவும்
இப்போது அயிலை மீன் நாட்டு குழம்பு ரெடி.
இதே முறையில் மற்ற மீன் வகைகளையும் செய்யலாம்.
குறிப்பு
ஆங்கிலத்தில் மேக்கேரில் ஃபிஸ் என்று அழைப்பார்கள். அயிலை மீனில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது.
ஒமேகா-3 இதய மற்றும் கொலஸ்ட்ரால் வியாதிகளுக்கு அருமருந்து.
•கட்டுப்படாத சர்க்கரை வியாதி கூட ஒமேகா-3 கட்டுப்படுத்தும்.