வேக வைத்த முட்டைக்கோஸ் நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !





வேக வைத்த முட்டைக்கோஸ் நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !

உலகளவில் விளையும் மிக முக்கிய காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஒன்றாகும். இது ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் காலே ஆகியவற்றை உள்ளடக்கிய க்ரூசிஃபெரே (Cruciferae) குடும்பத்தைச் சேர்ந்தது. 
முட்டைக்கோஸ் நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கிகிறது.

ஊட்டச் சத்துக்களின் பவர் ஹவுஸாக இருக்கும் முட்டைக்கோஸ் குளிர்கால டயட்டிற்கு மிகவும் ஏற்ற காய்கறியாக இருக்கிறது. 
உடல் பருமன், நீரிழிவு மற்றும் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைப்பதில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முட்டைக்கோஸில் அடங்கி இருக்கும் சல்ஃபர் கன்டன்ட்டான சல்ஃபோராஃபேன் (sulforaphane), குறிப்பாக இதற்கு புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆற்றலை கொடுக்கிறது. 

sulforaphane கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸ்-க்கு கலரை கொடுக்கும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸாக இருக்கின்றன அந்தோசயனின்ஸ் (Anthocyanins). 
இவை கேன்சர் செல்கள் உடலில் உருவாவதை மெதுவாக்கும் மற்றும் ஏற்கனவே உருவான கேன்சர் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில், உடலுக்கு ஊட்டம் தரும் வகையில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. 

இதிலுள்ள வைட்டமின் ஏ கண் பார்வை தெளிவாக தெரியவும், ஊட்டச் சத்துக்கள் சரும வறட்சி, தலைமுடி உதிர்வு, உடல் சூடு, தொற்று நோய்கள் போன்ற வற்றையும் குணப்படுத்த உதவுகின்றன.

இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதே ஆகும். 
முட்டை கோஸ் ஜூஸில் குறைவான கலோரியே உள்ளதால் உடலில் அதிகபடியாக கொழுப்பும் சேராது. இதனை குடிப்பதால் உள்ளுருப்புகளில் படிந்திருக்கும் டாக்ஸின்களை அழித்து எளிதாக உடல் எடையை குறைக்க உதவும்.

அல்சர் உள்ளவர்கள் முட்டைகோஸ் தண்ணீர் பருகி வருவதினால் விரைவில் குணமடைய முடியும். ஏனெனில் முட்டைகோஸில் இருக்கும் விட்டமின் சி வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை குணப்படுத்தக் கூடியது.

புற்றுநோயால் பதிக்கப் பட்டவர்களுக்கு முட்டைகோஸ் ஜூஸ் மிகவும் நன்மையை தருகின்றன. 

இதற்கு காரணம் முட்டைகோஸ் ஜூஸில் அதிகப்படியான ஐசோசியனேட் இருப்பதால் இவை நுரையிரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுக்கின்றன.
சருமத்தில் ஏற்படக்கூடிய பரு, கரும்புள்ளி, பருக்கள் போன்றவைகளே. இத்தகைய சரும பிரச்சனைகளுக்கு முட்டைகோஸ் ஜூஸ் நல்ல பலனை தருகின்றது.
முட்டைகோஸ் ஜூஸ் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்து இருப்பதால் இவற்றை தொடர்ந்து குடித்து வருவதால் சரும ஆரோக்கியத்தை பராமரித்து சரும பிரச்சனைகளில் இருந்து முழுமையாக தீர்வு பெறலாம்.

வயதான தோற்றம் வருவதை தடுத்து, இளமையாக இருக்க பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். அவர்கள் என்றும் இளமையுடன் இருக்க முட்டைகோஸ் ஜூஸ் பெரிதும் உதவும்.
Tags: