கறிவேப்பிலை மீன் வறுவல் செய்வது எப்படி?





கறிவேப்பிலை மீன் வறுவல் செய்வது எப்படி?

கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது. 
கறிவேப்பிலை மீன் வறுவல்
இந்த கருவேப்பிலை ஆனது உங்கள் இருதயத்தை சீராக இருக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் உள்ள தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது. 

உங்கள் தலைமுடி மற்றும் உங்கள் தோல் ஆகிவற்றின் தன்மையை மேம்படுத்துகிறது. கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்து இருக்கிறது. 

இந்த போலிக் ஆசிட் என்பது முக்கியமாக உடலில் உள்ள இரும்புச் சத்தை ஈர்ப்பதற்கு மற்றும் கொண்டு சேர்ப்பதற்கு உதவியாக இருக்கிறது. இந்த கறிவேப்பிலையில் அதிகமான இரும்புச் சத்தும் இருக்கிறது. 

அதே நேரத்தில் போலிக் ஆசிட் இருக்கிறது. இவை இரண்டும் அதிகமாக இருக்கும் பொழுது இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் அடியோடு குறைந்து விடும் என்று கூறுகின்றனர். 

முடிந்தவரை நம் உணவில் அதிகமான கறிவேப்பிலையை எடுத்துக் கொள்வது நல்லது.விடுமுறை நாட்களில் தான் நம்மால் மீனை வாய்க்கு சுவையாக சமைத்து பொறுமையாக சாப்பிட முடியும். 

அதிலும் மீனை வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட விரும்பினால், இந்த வாரம் கறிவேப்பிலை மீன் வறுவலை செய்து சுவையுங்கள்.இதை செய்வது மிகவும் சுலபம். 

இங்கு அந்த கறிவேப்பிலை மீன் வறுவலின் செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பாம்ஃப்ரெட் மீன் (Pomfret Fish) – 1 பெரிய கையளவு 

தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு அரைப்பதற்கு…

கறிவேப்பிலை – 1 கையளவு

மிளகு – 1 டீஸ்பூன்

வரமிளகாய் – 2-3

பூண்டு – 4 பற்கள்

பச்சை மிளகாய் – 3-4

மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 3-4 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:
கறிவேப்பிலை மீன் வறுவல் செய்வது எப்படி?
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தை யும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அந்த மசாலாவை மீனில் தடவி, 1-2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு ஒரு தவா அல்லது தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீனை வைத்து, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!!!
Tags: