கொலஸ்ட்ரால் உள்ள முந்திரி ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்?





கொலஸ்ட்ரால் உள்ள முந்திரி ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்?

முந்திரி பருப்பு எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். இது சுவைப்பதற்கு பட்டர் டேஸ்ட்டில் இருக்கும். 
முந்திரி ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்?
அது மட்டுமல்லாமல் வறுத்த முந்திரியில் கொஞ்சம் கருப்பு உப்பு தூவி சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.
இந்தியாவை பொருத்த வரை இது தான் மக்களின் விருப்பமான ஸ்நாக்ஸ்ம் கூட. இந்த முந்திரி பருப்பில் இல்லாத ஊட்டச் சத்துக்களே இல்லை எனலாம். அது பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

சுவை
சுவை
இது சாப்பிட இனிப்பு சுவையுடன் மென்மையாக இருக்கும். நட்ஸ் வகைகளில் இது மிகவு‌ம் சிறந்தது. இதை அப்படியே பச்சையாகவோ அல்லது வறுத்து உப்பு தூவி கூட நீங்க சாப்பிடலாம்.

மற்ற வடிவிலும் கிடைக்கும்
மற்ற வடிவிலும் கிடைக்கும்
இந்த முந்திரி பருப்பை நீங்கள் மற்ற வகைகளில் கூட எடுத்துக் கொள்ளலாம். முந்திரி பருப்பு பால், க்ரீம், முந்திரி சீஸ் வகைகள், க்ரீம் சாஸ் போன்ற வடிவில் கூட பயன்படுகிறது.

இந்த முந்திரி பருப்பு மருத்துவ துறையிலும், வருமானம் ரீதியாகவும் நிறைய வகைகளில் பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் முந்திரியின் ஒவ்வொரு பாகங்களுமே பயன்படுகின்றன.

முந்திரி பட்டை மற்றும் இலை
முந்திரி பட்டை மற்றும் இலை
இதன் பட்டை மற்றும் இலை வயிற்று போக்கு, தலைவலி மற்றும் வலிகளுக்கு பயன்படுகிறது. 

இலைக ளிலிருந்து எடுக்கப்படும் சாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. முந்திரி பட்டை வாயில் ஏற்படும் அல்சருக்கு (புண்கள்) பயன்படுகிறது.

முந்திரி பருப்பு திரவம்
முந்திரி பருப்பு திரவம்
முந்திரி பருப்பு கூட்டில் இருந்து பெறப்படும் திரவம் மருத்துவ குணங்கள் மற்றும் ஆன்டி பயாடிக் தன்மையை கொண்டுள்ளது. 
நுரையீரலை சுத்தம் செய்யும். இது லேப்பிராசி, மருக்கள், ஸ்கர்வி, பற்களில் ஏற்படும் புண்கள், படர்தாமரை போன்ற வற்றிற்கு பயன்படுகிறது.

முந்திரி விதை மற்றும் தண்டுகள்

முந்திரி பருப்பு விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் பாதங்களில் ஏற்படும் வெடிப்பை போக்க பயன்படுகிறது. 

அதன் தண்டுகளிலிருந்து பெறப்படும் பிசின் புத்தகங்கள் மற்றும் மரங்களை வார்னிஸ் செய்ய பயன்படுகிறது.

முந்திரிப்பழம்
முந்திரிப்பழம்
இதன் ஆன்டி பயாடிக் தன்மையால் வாயு மற்றும் வயிற்று அல்சருக்கு பயன்படுகிறது. முந்திரி பழத்திலிருந்து பெறப்படும் திரவம் ஸ்கர்வி நோயை குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது.

ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் முந்திரி பருப்பில்

5.20 கிராம் தண்ணீர்

553 கிலோ கிராம் ஆற்றல்

18.22 கிராம் புரோட்டீன்

43.85 கிராம் கொழுப்பு

30.19 கிராம் கார்போஹைட்ரேட்

3.3கிராம் நார்ச்சத்து

5.91 கிராம் சர்க்கரை

37 மில்லி கிராம் கால்சியம்

6.68 கிராம் இரும்புச் சத்து

292 மில்லி கிராம் மக்னீசியம்

593 மில்லி கிராம் பாஸ்பரஸ்

660 மில்லி கிராம் பொட்டாசியம்

12 மில்லி கிராம் சோடியம்

5.78 மில்லி கிராம் ஜிங்க்

0.5 மில்லி கிராம் விட்டமின் சி

0.423 மில்லி கிராம் தயமின்

0.058 மில்லி கிராம் ரிபோப்ளவின்

1.062 மில்லி கிராம் நியசின்

0.417 மில்லி கிராம் விட்டமின் பி6

25 மைக்ரோ கிராம் போலேட்

0.90 மில்லி கிராம் விட்டமின் ஈ

34.1 மைக்ரோ கிராம் விட்டமின் கே.

உடல் எடை பராமரிப்பு
உடல் எடை பராமரிப்பு
தற்போது நடத்திய ஆய்வுப்படி நட்ஸ் சாப்பிடாத பெண்கள் அதிக உடல் பருமன் கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. 

எனவே வாரத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளில் நட்ஸ் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை குறைந்து சிக்கென்று இருப்பீர்கள். 
மற்றொரு ஆய்வுப்படி நட்ஸ் நமது வயிறு நிரம்பிய திருப்தி தருவதோடு உடலுக்கு வெப்பத்தை கொடுக்கிறது. இதனால் உடல் மெட்டா பாலிசம் அதிகரித்து உடல் எடையும் குறைகிறது.

இதய ஆரோக்கியம்
இதய ஆரோக்கியம்
இந்த முந்திரி பருப்பில் மோனோ சேச்சுரேட்டேடு கொழுப்பு, பாலி அன்சேச்சுரேட்டேடு கொழுப்பு போன்றவை உள்ளன. 

இது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை, ட்ரைகிளிசரைடு போன்ற வற்றை எரித்து நல்ல கொலஸ்ட்ராலை சமன் செய்கிறது. 

இதனால் இதய நோய்கள், பக்க வாதம், கரோனரி இதய நோய்கள் போன்றவை வராமல் காக்கிறது. 

இந்த நட்ஸில் அதிகளவு மக்னீசியம் உள்ளது. இது இதய தசைகளுக்கும், உயர் இரத்த அழுத்தத்துக்கும் பயன்படுகிறது.

எலும்பு ஆரோக்கியம்
எலும்பு ஆரோக்கியம்
முந்திரி பருப்பில் உள்ள பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம் மற்றும் விட்டமின் கே போன்றவை நமது எலும்பு மற்றும் பற்கள் உற்பத்திக்கும் வலிமைக்கும் துணை புரிகிறது. 

மக்னீசியம் எலும்புகளின் உருவாக்க த்திற்கும் கால்சியம் எலும்பின் வலிமைக்கும் உதவுகிறது. இதனால் ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற விபரீதம் வராமல் தடுக்கிறது.

டயாபெட்டீஸ்
டயாபெட்டீஸ்
டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு முந்திரி பருப்பு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் ஆன்டி டயாபெட்டிக் தன்மை உள்ளது. 
இது இன்சுலின் சுரப்பை சமநிலையில் வைக்கவும், குளுக்கோஸை கட்டுப்பாட்டில் வைக்கவும் பயன்படுகிறது.

புற்றுநோயைத் தடுத்தல்
புற்றுநோயைத் தடுத்தல்
முந்திரி பருப்பு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் களான டோகோபெரோல்ஸ், 

அனார்டுக் அமிலங்கள், கார்டனல்கள், கார்டொல்ஸ் மற்றும் சில ஃபினோலிக் போன்றவைகள் முந்திரி பருப்பு ஓட்டில் உள்ளன. 

இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களின் பெருக்கத்தை யும், ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், செல் பிறழ்ச்சி, டிஎன்ஏ பாதிப்பு, கேன்சர் செல்கள் போன்ற பிரச்சினை களை சரிகட்ட உதவுகிறது.

மூளை செயல்பாட்டுக்கு பலம்
மூளை செயல்பாட்டுக்கு பலம்
முந்திரி பருப்பில் மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. 
இதனால் மூளையில் உள்ள நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள் எல்லாம் ஒழுங்காக இயங்குகிறது. ஸ்சினாப்டிக் கடத்தல், மூளையில் உள்ள திரவம் எல்லா வற்றையும் சரி செய்கிறது. 

எனவே வயதானவர்கள் இதை எடுத்துக் கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

சிறுநீரகக் கற்கள்
சிறுநீரகக் கற்கள்
சிறுநீர்ப் பையில் அதிகளவு கொழுப்பு படிகங்கள் தங்குவதால் சிறுநீர்க் கற்கள் உருவாகிறது. 

ஆராய்ச்சி தகவல்கள் படி நட்ஸ் அதிகமாக சாப்பிடும் போது பெண்களுக்கு ஏற்படும் குளோசிஸ்டெக்டோமி அபாயத்தை குறைக்கிறது.

இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி
இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி
முந்திரி பருப்பில் போதுமான இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. 
இதனால் அனிமியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. இரும்புச் சத்து நரம்புகள், இரத்த குழாய்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் மேம்பாட்டிற்கு மிகவும் அவசியம்.

கண் ஆரோக்கியம்
கண் ஆரோக்கியம்
முந்திரி பருப்பில் லுடின், ஜியாக்ஸிடின் போன்ற பொருட்கள் உள்ளன. இது கண்களில் உளள செல் பாதிப்பு, மாக்குலார் டிஜெனரேசன், கண்புரை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

சரும ஆரோக்கியம்
சரும ஆரோக்கியம்
சருமம் சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் சருமத்தின் மீட்சித் தன்மையை பாதுகாக்கிறது.
குறிப்பு :

முந்திரி பருப்பு உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால் அதை தவிர்ப்பது நல்லது. அதிலுள்ள அலர்ஜி பொருட்கள் உங்களுக்கு வாழ்நாள் அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

உணவுப் பழக்கம்
உணவுப் பழக்கம்
நீங்கள் வீட்டிலேயே முந்திரி பருப்பு மற்றும் இதர நட்ஸ்களைச் சேர்த்து சாப்பிட்டு வரலாம். காய்கறிகள் மற்றும் சிக்கன் சாலட்டில் முந்திரி பருப்பு சேர்த்து சாப்பிடலாம். 

முந்திரி பருப்பை கொண்டு பட்டர் கூட தயாரிக்கலாம். நறுக்கிய முந்திரி பருப்பை மீன், சிக்கன் மற்றும் டிசர்ட் வகைகளில் தூவி அலங்கரிக்கலாம். 

உங்களுக்கு பால் அழற்சி இருந்தால் முந்திரி பருப்பு பால் குடிக்கலாம். முந்திரி பருப்பை அரைத்து கறி வகைகள், குழம்பு, சூப் போன்ற வற்றில் சேர்க்கலாம்.

முந்திரி பருப்பு பால் ரெசிபி

தேவையான பொருட்கள்:  

1 கப் பச்சை முந்திரி பருப்பு 

4 கப் தேங்காய் தண்ணீர் 

அல்லது தண்ணீர் 1/4 டீ ஸ்பூன் 

கடல் உப்பு 2-3 

பேரீச்சம் பழம் (விருப்பத்திற்கு ஏற்ப) 

 1/2 டீ ஸ்பூன் வெண்ணிலா க்ரீம் (விருப்பத்திற்கு ஏற்ப )

செய்முறை

முந்திரி பருப்பை இரவில் அல்லது 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் தண்ணீரை வடிகட்டி விட்டு எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். 
வழுவழுவென அரையுங்கள். முந்திரி பருப்பு பால் ரெடி. இதை 3-5 நாட்கள் பருகி வரலாம். ஏராளமான நன்மைகளை பெறலாம்.

முந்திரி பருப்பு பட்டர்
முந்திரி பருப்பு பட்டர்
2 கப் முந்திரி பருப்பு

எள் எண்ணெய் தேவைக்கேற்ப

உப்பு சுவைக்கேற்ப

பேரீச்சம் பழம் (விருப்பத்திற்கு ஏற்ப) 

பயன்படுத்தும் முறை 

அரைக்கும் மிஷினில் மேற்கண்ட பொருட்களை போட்டு மென்மையான பதம் வரும் வரை அரையுங்கள். 
முந்திரி பருப்பை கொண்டு காஜூ கத்லி கூட செய்து சுவைக்கலாம். சுவைக்கு சுவையும் ஆச்சு ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் ஆச்சு.
Tags: