டேஸ்டியான முட்டை பிரியாணி செய்வது எப்படி?





டேஸ்டியான முட்டை பிரியாணி செய்வது எப்படி?

முட்டைகள் மலிவு விலையில் கிடைக்கும் அதிக சத்துகள் நிறைந்த உணவாகவும், எளிதில் அணுகக்கூடிய உணவுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. 
டேஸ்டியான முட்டை பிரியாணி செய்வது எப்படி?
இவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிப்பதால், ஆபத்துகளை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதை ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன. 

முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு சத்தான உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது. அவை உயர்தர புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கிறது. 

முட்டையில் நல்ல கொழுப்புகளே உள்ளதால், எந்த ஆபத்தும், முட்டையால் ஏற்படாது என்கிறார்கள். உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக முட்டை சாப்பிடலாம். 
முட்டையில் உள்ள மஞ்சள் கருவைத் தவிர்த்து விட்டு, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. அதிலும் பிராய்லர் கோழி முட்டைகளைவிட நாட்டுக்கோழி முட்டைகளை சாப்பிட்டால் அதைவிட சிறப்பு. 

முட்டையை வேக வைக்காமல் குடித்தால், ஆபத்துதான் ஏற்படுமாம். பச்சை முட்டையின் வெள்ளைக் கருவில் அவிடின் என்ற புரோட்டீன் உள்ளது. 

இது முட்டையில் உள்ள பயாட்டின் என்ற வைட்டமினுடன் இணையும் போது, சில இடர்களை உண்டுபண்ணுகிறது.. பயாடின் சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. 

ஆதனால், முட்டையை வேகவைத்து சாப்பிட்டால், அந்த அவிடின் அழிந்து போய் விடும். முட்டையின் முழு பலனும் நமக்கு கிடைத்து விடும். சரி இனி பாசுமதி அரிசி பயன்படுத்தி டேஸ்டியான முட்டை பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – அரை கிலோ,

முட்டை – 10,

தக்காளி – 4,

பெரிய வெங்காயம் – 3,

கடைந்த தயிர் – 1 கப்,

எண்ணெய் – அரை கப்,

நெய் – கால் கப்,

உப்பு – 2 டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

இஞ்சி + பூண்டு விழுது – 4 டீஸ்பூன்.

அரைக்க

பட்டை – 2,

லவங்கம் – 2,

ஏலக்காய் – 6,

பச்சை மிளகாய் – 5,

புதினா – ஒரு கைப்பிடி,

கொத்த மல்லித்தழை – ஒரு கைப்பிடி.
செய்முறை:
டேஸ்டியான முட்டை பிரியாணி செய்வது எப்படி?
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியைக் நன்றாக கழுவி ஊற விடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள்.

அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் ஊற்றி சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேக விடுங்கள். 

ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். 

 வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கவும்.
எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்க விடுங்கள்.
இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைத்து, ஊற வைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேக விட்டு வடித்து, 

கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’ போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும். சூப்பரான முட்டை பிரியாணி ரெடி.
Tags: