தேனில் விட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, சி, இ முதலிய வைட்டமின்களும் மற்றும் அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், குளோரின், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து,
பாஸ்பரஸ், உப்பு, குளுகோஸ், லெவுகோஸ், லாக்டிக் அமிலம், டார்டாரிக் ஆஸிட், சிட்ரிக் அமிலம், க்ளாரிக் அமிலம் போன்ற இதர வகையான சத்துப் பொருள்களும் உள்ளன.
இவையாவும் நம் உடல் வளர்ச்சிக்குத் தேவை. தேன், பிறந்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், நோயுற்றவர்கள் என அனைவருக்கும் ஏற்ற இயற்கை உணவு தான்.
இருப்பினும் பலர் தேனைப் பற்றி பல வதந்திகளைப் பரப்புவது முற்றிலும் அறியாமையே. அளவுக்கு அதிகமா தேன் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
தேனை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் மற்றும் ஹைபோடென்ஷன் அபாயத்தையும் அதிகரிக்கலாம்.
அளவுக்கு அதிகமாக தேன் எடுத்துக் கொண்டால் என்னவாகும் என பார்க்கலாம். தேன் சர்க்கரைக்கு மாற்றான ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள்.
சுத்தமான தேனை அதன் நிறத்தை வைத்தே நாம் அடையாளம் கண்டுவிட முடியும். நல்ல தங்க நிறம் அல்லது ஆம்பர் நிறம் கொண்டதாக தேன் இருக்கும்.
ஆனால், வெளிறிய நிறத்தில் இருக்கும் பட்சத்திலும், தேன் தண்ணீரில் கரையும் பட்சத்திலும் அது சுத்தமான தேன் கிடையாது. அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அலாதிப் பிரியம்.
அது எந்த முறையில் சமைக்கப் பட்டிருந்தாலும் சரி. உலகில் அனைத்து நாடுகளின் உணவுப் பட்டியலிலும் சிக்கன் இன்றியமையாத உணவாகத் திகழ்கிறது.
அந்த வகையில் நாவில் எச்சில் ஊறவைக்கும் ‘ஹனி சிக்கன்’ செய்யும் முறையை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் விங்ஸ் - 300 கிராம்
* சோள மாவு - அரை கப்
* மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
* தேன் - 4 தேக்கரண்டி
* மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
* இஞ்சி பூண்டு அரைத்தது - 1 தேக்கரண்டி
* பார்பிக்யூ சாஸ் - அரை கப்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சுத்தம் செய்யப்பட்ட சிக்கனை ( விங்ஸ்) ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரைத்த இஞ்சி பூண்டு, உப்பு சேர்த்து நன்கு கிளரி சிறிது ஊற வைக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்க வேண்டும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்ற வேண்டும். அதன் பிறகு ஊற வைத்த சிக்கனை எடுத்து சோள மாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் பொறிக்க வேண்டும்.
ஒரு புதிய பாத்திரத்தில் சிறிது அளவு எண்ணெயை ஊற்றி அதில் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேனை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
2 நிமிடம் கலக்கிய பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பொரிக்கப் பட்ட சிக்கனை எடுத்து அடுப்பில் இருக்கும் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேன் கலவையில் கொட்டி வதக்க வேண்டும்.
அடுப்பை அணைத்து தட்டில் பரிமாறினால் சுவையான ‘ஹனி சிக்கன்’ ரெடி.