குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகமுள்ளது. மேலும் வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்.
குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.
புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது.
பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. சரி இனி குடைமிளகாய் கொண்டு சுவையான குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 4
முட்டை- 4
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
கேரட் - 2
மிளகு தூள் - சிறிதளவு
சீரகத்தூள் - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
குடமிளகாய் மேல் பகுதியை கட் பண்ண வேண்டும். அதில் இருக்கும் விதைகளை எடுக்க வேண்டும்
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக் கொள்ளவும்.
4 முட்டைகளையும் 4 வெவ்வேறு டம்ளர்களில் ஊற்ற வேண்டும். 4 டம்ளர்களிலும் மிளகுத்தூள், சீரகத்தூள, தேவைக்கேற்ப உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4 டம்ளர்களிலும் ஸ்பூனை வைத்து கலந்து கொள்ள வேண்டும்.
இந்த நான்கு டம்ளர்களில் உள்ள கலவையும் நான்கு குடைமிளகாயில் ஊற்ற வேண்டும்.
அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி இட்லி தட்டின் மேல் இந்த நான்கு குடை மிளகாய் வைத்து
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கும் வழிகள் என்ன?ஆவியில் 15 நிமிடங்கள் வேக விட வேண்டும். சூடான சுவையான குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி தயார்.