உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல பகுதிகளில் விளையும் பேரீச்சை பழங்கள் ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக உள்ளன.
நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்து ஆகியவற்றை கொண்டுள்ள பேரீச்சை பழங்கள் நமக்கு துரிதமான ஆற்றலை தருகிறது மற்றும் ஒட்டு மொத்த உடல்நலனுக்கு பல வகைகளில் பலன் அளிப்பதாக உள்ளது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், கொலஸ்ட்ராலை கரைப்பதற்கும் இது உறுதுணையாக அமைகிறது. பேரீச்சையை பலர் ஸ்நாக்ஸ் போல சாப்பிடுகின்றனர்.
சிலர் காலை உணவில் இதனை சேர்த்துக் கொள்கின்றனர். பிரியாணி உணவுடன் பேரீச்சையை சைட் டிஷ் ஆக சேர்த்துக் கொள்ளும் வழக்கம் பலரிடம் உள்ளது.
இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாக உள்ள ஆயுர்வேதத்தில் பேரீச்சை பழங்கள் அதன் குளிர்ச்சி தன்மையை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இதனை நெய்யில் சேர்த்து சாப்பிடுவதை ஆயுர்வேதம் ஊக்குவிக்கிறது. கபம் வாதம் போன்றவற்றை நெய் குறைக்கும் என்று அறியப்படுகிறது.
நெய் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும் என்றும், எலும்புகள் வலுவடையும் என்றும், இதே நலன் மேம்படும் என்றும் ஆயுர்வேதம் தெரிவிக்கிறது.
நெய்யில் பேரீச்சை பழத்தை சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், நம் உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி அடையும் என்றும் ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.
அது மட்டுமல்லாமல், நம் எண்ண ஓட்டம் மேம்படையும் என்றும், ஆழ்ந்த உறக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப் படுகிறது. பேரிச்சை கீர் பொதுவாக பண்டிகைக் காலங்களில் நாம் விரும்பி அருந்தும் ஒரு இனிப்பு , கீர். பாதாம் கீர் நாம் அனைவரும் கேள்விப் பட்டிருப்போம்.
அது என்ன பேரிச்சை கீர்? ஆம், இதுவும் சுவை மிகுந்த ஒரு இனிப்பு தான். இது ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. வாருங்கள் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
4 கப் - பாதாம் பால்
அரை கப் - பாசுமதி அரிசி, (கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கப்பட்டது.)
ஏலக்காய் தூள் - (தேவைப்பட்டால்)
உங்கள் விருப்பதிற்கேற்ப தென்னை சர்க்கரை, சீனித்துளசி போன்றவற்றை சுவை யூட்டிகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
6 - பேரிச்சை
செய்முறை
பாதாம் பாலைக் கொதிக்க விடவும். பிறகு அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும், தென்னை சர்க்கரை சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். கொதிக்கும் போது, அடுப்பை குறைத்து வைக்கவும்.
பின்பு அதில் அரிசியைப் போட்டு வேக விடவும். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும். பால் சுண்டி, அரிசி வெந்தவுடன் சர்க்கரை சுவை பார்க்கவும். பின்பு அதில் நறுக்கி வைத்த பேரிச்சம் பழத்தை சேர்க்கவும்.
தென்னை சர்க்கரை அல்லது சீனித்துளசிக்கு மாற்றாகவும் பேரீச்சம்பழம் பயன்படுத்தலாம். ஆறியபின், இந்த கீரை பரிமாறலாம். தேவைப்பட்டால் பிரிட்ஜில் வைத்து குளிர்ந்தபின் பரிமாறலாம்.