மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.
பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில் சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக இருக்கிறது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரிய வந்துள்ளது.
சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒரு முறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது. சரி இனி சிப்பி மீன் பயன்படுத்தி டேஸ்டியான சிப்பி மீன் உருளைக்கிழங்கு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையான பொருட்கள்.:
அரிசி – 300 கிராம்
சிப்பி மீன் – 1 கிலோ கிராம்
வெங்காயம் – 2 நடுத்தர அளவு
பூண்டு – 3 பற்கள்
தக்காளி – 200 கிராம்
உருளைக்கிழங்கு – 1 (பெரியது)
மல்லித் தளை – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
நல்ல மிளகு தூள் – தேவையான அளவு
வினிகர் , சீஸ்
தேங்காய் எண்ணெய்
செய்முறை.:
சிப்பியை நன்கு சுத்தம் செய்து அதிலுள்ள ஓட்டின் மேலுள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி விடவும். ஏனென்றால் அதன் ஓட்டையும் சேர்த்து சமைக்க வேண்டும்.
வாணலியில் சிப்பிகளை போட்டு ஒரு மூடியால் மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்
சிப்பியின் ஓடு திறக்கும் வரை காத்திருந்து பின் தீயை அணைத்து விடவும்.
வெங்காயம் தக்காளி மற்றும் மல்லித் தளையை நறுக்கிக் கொள்ளவும்
பின்பு உருளைக் கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்
ஒரு பெரிய கடாயில் தேங்காய் எண்ணெய்,சிறிது வெங்காயம், தக்காளி, மல்லித்தளை, உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்க்கவும்.
பின்பு உருளைக் கிழங்கை அவற்றின் மீது இடைவெளி இல்லாமல் மூடி வைக்கவும். பின்பு மீண்டும் தேங்காய் எண்ணெய்,சிறிது வெங்காயம், தக்காளி, மல்லித்தளை, உப்பு, நல்ல மிளகு தூள் மற்றும் சீஸ் போன்ற வற்றை போடவும்.
பின்பு சிப்பியை திறந்து சதைப்பகுதி உள்ள ஓட்டை மட்டும் எடுத்து அதனை படத்தில் உள்ளது போல் அதன் மேல் வைக்கவும்.மீதமுள்ள ஓட்டையும் தனியே வைத்திருக்கவும்.
ஏனெனில் அதிலுள்ள நீரை நாம் பயன்படுத்த வேண்டும்
பின்பு அதன் மேல் பூண்டு மற்றும் மல்லித் தளை சேர்க்கவும்
அதன் மேல் அரிசியை போடவும்.
மீண்டும் அதன் மேல் மீண்டும் தேங்காய் எண்ணெய், சிறிது வெங்காயம், தக்காளி, மல்லித்தளை, உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் ஆகியவற்றை போடவும்.
பின்பு ஒரு கைப்பிடி அளவு சீஸ் சேர்க்கவும். பின்பு சிப்பியை வேக வைத்த வாணலியில் உள்ள நீரை வடிகட்டி எடுக்கவும்
அந்த நீரை கடாயில் அவை மூழ்கும் அளவு விடவும்.
தேவைப்பட்டால் நீர் சேர்க்கவும்
பின்பு மூடி வைத்து மிதமான தீயில் வேக விடவும். கொதிக்கும் வரை காத்திருக்கவும்
பின்பு அதனை எடுத்து படத்தில் உள்ளது போல் தீ நேரடியாக படாதவாறு கரியின் மூலம் வேக வைக்கவும்
அதிலுள்ள நீர் முழுவதையும் உருளை கிழங்கு மற்றும் அரிசி எடுத்துக் கொள்ளும் வரை வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும்