கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக் கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக் கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி செய்கிறது.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்கும். கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோ போரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும்.
மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும். இரத்த சோகை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் தான் காரணம்.
கொண்டைக் கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு உறுதியை கொடுக்கும்.
கொண்டைக் கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
அப்பாவின் மரண பயம்... அப்பாவை மனநல மருத்துவரிடம் அழைத்து போ.. நெக்ரோபோபியா !
தேவையானவை:
முளைகட்டிய கொண்டைக்கடலை – ஒரு கப்,
மொச்சை – ஒரு கப்,
பச்சைப் பட்டாணி – ஒரு கப்,
முளைகட்டிய பாசிப் பயறு – ஒரு கப்,
முளைகட்டிய கொள்ளு – ஒரு கப்,
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 2,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பூண்டு – 4 பல்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கடுகு – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை, எண்ணெய்,
பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, மொச்சை, பாசிப் பயிறு, கொள்ளு எல்லா வற்றையும் ஒன்றாக குக்கரில் சேர்த்து, தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து… இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, வேக வைத்த பயறு வகையுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து, வேக வைத்த பயறுடன் கலந்து இறக்கவும்.
குறிப்பு:
பயிறு வகைகளில் புரோட்டீன் அதிகம் என்பதால்… சுண்டல், சாலட், அடை, வடை என்று பல விதமாக பயிறு வகைகளைப் பயன்படுத்தலாம்.