வெறும் வயித்துல இதெல்லாம் சாப்பிடால் கஷ்டப்படுவீங்க !





வெறும் வயித்துல இதெல்லாம் சாப்பிடால் கஷ்டப்படுவீங்க !

உணவின் சுவை விதவிதமாக இருக்கிறது. சிலருக்கு காரமான உணவுகள் என்றால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். சிலருக்கு இனிப்பு பொருட்களைப் பார்த்தால் போதும் வாயில் போடாமல் இருக்க மாட்டார்கள். 
வெறும் வயித்துல இதெல்லாம் சாப்பிடால் கஷ்டப்படுவீங்க
அதே மாதிரி தான் சிலருக்கு புளிப்பு சுவை என்றால் போதும் நாவை சொட்டை போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். 

ஆனால் இப்படி அதிகமாக புளிப்புச் சுவை எடுப்பது நம் வயிற்று நலனை பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல உணவும் கூட நஞ்சு தான். எனவே எதையும் சாப்பிடுவதற்கு முன் அதைப் பற்றிய முழுமையான தகவலை தெரிந்து கொள்வது நல்லது. 
ஆனால் நாம் என்ன பண்ணுகிறோம் யாராவது எதையாவது சொன்னால் போதும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற ஆரம்பித்து விடுவோம். 

குறிப்பாக எடை இழப்பு என்று வரும் போது நிறைய பேர்கள் எலுமிச்சம் பழத்தை சாப்பிடுகின்றனர்.

ஏன் தங்களுடைய வாயு மற்றும் அஜீரணக் கோளாறு களைக் களையக் கூட நிறைய பேர் புளிப்பான உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். 

ஊறுகாய், புளி, ஆரஞ்சு, மாங்காய், நெல்லிக்காய், தயிர் மற்றும் லெமன் ஜூஸ் போன்றவற்றை அதிகமாக சாப்பிடும் போது உங்களுக்கு வயிற்று பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே தான் புளித்த உணவுகள் வயிற்று வலி மற்றும் வயிற்று தொற்றுக்கு முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது.

வயிற்று வலி
வயிற்று வலி
எடை இழப்பு என்ற பெயரில் அதிக எலுமிச்சை ஜூஸ் குடிப்பவர் களுக்கு வயிற்று வலி ஏற்படலாம். ஏனெனில் லெமனில் உள்ள அதிகமான சிட்ரிக் அமிலத்தை நம் வயிற்றால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. 

எனவே வெறும் வயிற்றில் சிட்ரிக் அமில உணவுகளை எப்பொழுதும் எடுத்துக் கொள்ளாதீர்கள். சாப்பிட்ட பிறகு சிட்ரிக் அமில உணவுகளை எடுங்கள். 
அதே மாதிரி கூடுதலான அஸ்கார்பிக் அமில உணவுகளையும் நம் உடல் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

எனவே உங்களுக்கு வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் அதற்கு இது தான் காரணம்.

மலச்சிக்கல்
மலச்சிக்கல்
புளித்த உணவுகள் வயிற்றுவலி மட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சினை களையும் உண்டாக்குகிறது. 

புளித்த உணவுகள் வயிற்றில் வாயுத் தொந்தரவை உண்டாக்கி கடுமையான மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கி விடுகின்றன. இதனால் உடலில் இருந்து கழிவுகள் வெளியேற முடியாமல் தவிக்கிறது. 

ஊறுகாய், ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் வாயுத் தொல்லை ஏற்படும். எனவே வெறும் வயிற்றில் புளிப்பான உணவுகளை சாப்பிடாதீர்கள்.

சிறுநீர் பாதை தொற்று
சிறுநீர் பாதை தொற்று
சிறிய குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீர் பாதை தொற்று பெரும்பாலும் அதிகப்படியான புளித்த உணவுகளால் ஏற்படுகிறது. 

ஏனெனில் புளித்த உணவுகள் நம் உடலின் pH அளவை மாற்றி விடும். இதனால் பெண் குழந்தைகளுக்கு பெண்ணுறுப்பு பகுதியில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 
சிறுநீரக தொற்றுக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் pH ன் திடீர் மாற்றமும் ஒரு பொதுவான காரணமாகும். அல்சர்

தயிர் வயிற்றுக்கு குளிர்ச்சியை தரும் ஒரு விஷயமாக பார்க்கப் படுகிறது. அதனால் தான் கோடை காலத்தில் குறிப்பாக எல்லோரும் தயிரை சேர்க்கின்றனர். 

ஆனால் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடும் போது உங்க வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இது அல்சர் போன்ற வயிற்று புண் பிரச்சனைக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. 

வெறும் வயிற்றில் தயிரை உட்கொண்டால் அதில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் நடுநிலை ஆக்கப்பட்டு அல்சரை ஏற்படுத்த காரணமாக அமைகிறது.

நல்ல பாக்டீரியாவும் புளிப்பு உணவுகளும்
நல்ல பாக்டீரியாவும் புளிப்பு உணவுகளும்
ஏற்கனவே நம் வயிற்றில் குடல் ஆரோக்கி யத்திற்காக சில நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. 
இதை பற்றி தெரியாமல் நீங்கள் புளித்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நல்ல பாக்டீரி யாக்களுக்கு சேதத்தை விளைவிக்கிறது. இது நமது வயிற்றின் pH அளவை மாற்றி விடுகிறது.

முடிவு
முடிவு
எனவே எலுமிச்சைப் பழம், தக்காளி, புளி மற்றும் ஊறுகாய் ஆகிய வற்றை உட்கொள்ளும் போது, ​​நேரம் மற்றும் உணவின் அளவை கவனித்துக் கொள்ளுங்கள். 
மேலும் வெறும் வயிற்றில் புளித்த உணவுகளை சாப்பிடாதீர்கள். இந்த வழியை நீங்கள் பின்பற்றினால் உங்க வயிற்று ஆரோக்கியமும் மேம்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
Tags: