கிரிஸ்பி மசாலா டோஸ்ட் செய்வது எப்படி?





கிரிஸ்பி மசாலா டோஸ்ட் செய்வது எப்படி?

ஒரேகனோ பவுடர் தசைகளை வலுவாக்க உதவுகிறது. இயற்கை சத்துக்களால் செறிவூட்டப் பட்டது. உடல் உறுப்புகளுக்கு வலிமையையும் ஆற்றலையும் சேர்க்க உதவுகிறது.
கிரிஸ்பி மசாலா டோஸ்ட்
விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய ஊட்டச் சத்துக்களை வழங்க உதவுகிறது. இரும்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வழங்குவதில் நன்மை பயக்கும்.

பொதுவாக எல்லோருக்குமே மாலை நேரத்தில் பசி ஏற்படுவது சகஜம்தான். அந்நேரத்தில் சூடான தேநீர் அல்லது காபியுடன் சமோசா, பஜ்ஜி, பக்கோடா, ஸ்ப்ரிங் ரோல் போன்றவற்றை சாப்பிடுவோம். 
சாட் மசாலா என்பது தெற்காசியாவினைப் பூர்விகமாகக் கொண்ட இது சாட்டின் சுவைக்காகச் சேர்க்கப் பயன்படுகிறது. 

இது பொதுவாக ஆம்சூர் (உலர்ந்த மாம்பழ தூள்), சீரகம், கொத்தமல்லி, உலர்ந்த இஞ்சி, உப்பு (பெரும்பாலும் கருப்பு உப்பு ), கருப்பு மிளகு, சாதத்தை மற்றும் மிளகாய்த் தூள் ஆகியவற்றைக் கொண்ட கலவை ஆகும்.
கரம் மசாலாவும் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் சாட் மட்டுமின்றி, பப்பாளி, சப்போட்டா, ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்கள் ஆகியவற்றால் செய்யப்பட்டும் பழ சாலட்களில் சாட் மசாலா பயன்படுத்தப்படுகிறது. 

மேலும் சாட் மசாலா ஆனது உருளைக்கிழங்கு, பழங்கள், முட்டை டோஸ்ட்கள் மற்றும் வழக்கமான சாலட்டுகள் ஆகியவற்றின் மீதும் சுவைக்காகத் தெளிக்கப் படுகிறது.

இதற்கு பதிலாக வீட்டிலேயே பிரட் டோஸ்ட் செய்து சாப்பிடலாம். ஐந்தே நிமிடத்தில் பட்டர் டோஸ்டு பிரட் எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.
தேவையானவை:

பிரட் ஸ்லைஸ் – 2

ஒரேகனோ – 2 மேஜைக்கரண்டி

சாட் மசாலா – 1 மேஜைக்கரண்டி

சீஸ் – ½ கப்

பட்டர் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை:

பிரட்டை இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அதில் ஒருபக்கம் மட்டும் பட்டர் தடவி கொள்ளவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அதில் தவாவை வைத்து, பட்டர் தடவிய பிரட்டை தவாவில் வைக்கவும். 
லேசாக பொன்னிறமாக வரும் போது அதன் மறுபக்கத்தில் சீஸ் ஸ்ப்ரெட்டை தடவி அதன் மேல் ஒரேகனோ மற்றும் சாட் மசாலா தூவவும்.

சில நிமிடங்கள் கழித்து, பிரட்டை இரண்டு பக்கமும் நன்கு டோஸ்ட் செய்து மேலும் சீஸ் தடவி மொரு மொருப்பாக வரும்வரை வைத்திருந்து பின் எடுக்கவும். துரித உணவுகளுக்கு பதிலாக இவற்றை சாப்பிடலாம்.
Tags: