முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி?





முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி?

கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. 
முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி?
அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது என்கிறார்கள் மருத்துவர்கள். 

இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். 
இதை  ஊற வைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. 

நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது. சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும். 

முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து, காலையில்  வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும்.  உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

இதை தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால், உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும்; சுவாசத் தொந்தரவு நீங்கும்.  காய்ச்சலையும் குணமாக்கும். 
தேவையான பொருட்கள் :

முளைக்கட்டிய கொள்ளு - 2 கப், 

பச்சை பயிறு - 2 கப், 

கொண்டைக்கடலை - 2 கப், 

பட்டாணி - 2 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி

லெட்யூஸ் - சிறியது ஒன்று

கொத்தமல்லி தழை - சிறிதளவு

வெள்ளரிக்காய் - 1

மாங்காய் - 1

கேரட் - 2

எலுமிச்சம்பழம் - 1

உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட்
முளைக்கட்டிய தானியங்களை குக்கரில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, மாங்காய், வெள்ளரிக்காய் லெட்யூஸ், கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்ல வேக வைத்த தானியங்களுடன் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து கிளறவும். அத்துடன் உப்பு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலந்து பரிமாறவும் சூப்பரான முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட் ரெடி.
Tags: