ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையே நாம் சாப்பிடும் உணவுகள் தான். நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு தனிப்பட்ட குணமும், சிறப்பும் உள்ளது.
தொற்றுநோய்கள் ஏற்படாமல் இருக்க, ஏற்பட்ட நோய் விரைவில் குணமாக என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட உணவு உள்ளது. அந்த வகையில் காயம் சீக்கிரம் குணமாவதற்கும் சில உணவுகள் உள்ளது.
காயங்கள் ஏற்படாமல் இருப்பது என்பது எப்போதும் நமது கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாகும். ஏனெனில் எப்போது காயம் ஏற்படும் என்பது யாராலும் கூற முடியாததாகும்.
சிறிய காயம் முதல் பெரிய காயம் வரை எதுவாக இருந்தாலும் அது குணமாகும் வரை நம்முடைய அன்றாட வாழ்க்கையை பாதிக்கும்.
அந்த நிலையில் காயங்களை விரைவில் குணப்படுத்த மருந்துகளுடன் சில அத்தியாவசிய உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியமாகும். இந்த பதிவில் காயம் விரைவில் குணமாக என்னென்ன சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.
பெர்ரிஸ்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஊட்டச்சத்தின் ஒரு சக்தி நிலையமாகும், இது காயங்கள் மற்றும் உடல் சேதத்தை சரிசெய்ய உதவுகிறது.
குறிப்பாக அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்பட்ட காயங்கள் குணமாக இது மிகவும் அவசியமாகும். திராட்சை, மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூ பெர்ரி, ப்ளாக் பெர்ரி போன்ற வற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பெர்ரி வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும். கொலாஜன் மற்றும் மென்மையான திசுக்களை மீண்டும் உருவாக்க வைட்டமின் சி உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.
இது காயங்களை விரைவில் குணமாக்கும்.
காய்கறிகள்
பொதுவாக காய்கறிகள் சாப்பிடுவது ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது. காயங்களை குணப்படுத்தவும் குறிப்பிட்ட காய்கறிகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.
கேரட், குடைமிளகாய், ப்ரோக்கோலி, காலிபிளவர், முட்டைக்கோஸ், சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற வற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் அன்றாட உணவில் இந்த காய்கறிகளைச் சேர்ப்பது கார்போ ஹைட்ரேட்டுகளின் ஆரோக்கியமான மூலத்தைச் சேர்க்கிறது,
இது காயத்தினால் பொதுவாக உணரப்படும் சோர்வை எதிர்த்துப் போராட உதவும். கார்போ ஹைட்ரேட்டுகள் உங்கள் மூளைக்கு ஆற்றலை அளிக்கின்றன மற்றும் தசை உடைவதைத் தடுக்கின்றன.
இதன் மூலம் உங்கள் உடலுக்கு வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவற்றின் ஊக்கமும் கிடைக்கும்.
கொழுப்புகள்
ஆரோக்கியமான கொழுப்புகள் எப்போதும் நமக்கு நன்மையை வழங்குவதாகும்.
குறிப்பாக அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, ஆரோக்கியமான கொழுப்பு உங்கள் பழங்கள் மற்றும் காய்கறிக ளிலிருந்து நீங்கள் பெறும் சுவையான வைட்டமின்கள் அனைத்தையும் உறிஞ்ச உதவுகிறது.
உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், தொற்று நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கவும் கொழுப்பு அவசியம். ஆலிவ் ஆயில், அவகேடா, தேங்காய் எண்ணெய், நட்ஸ் போன்றவற்றில் இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது.
வைட்டமின் ஈ காயத்தை விரைவாக குணப்படுத்தவும், வடுக்களை தோன்றுவதை தடுக்கவும் உதவுகிறது.
பச்சை நிற காய்கறிகள்
பச்சை நிற காய்கறிகள் மற்ற பொருட்கள் அளவிற்கு பிரபலமானதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் காயங்களை குணப்படுத்து வதற்கு இது மிகவும் முக்கிய மானதாகும்.
பச்சை நிற காய்கறிகளில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் கே உள்ளது. இவை காயங்கள் வேகமாக குணமாவதற்கு அவசிய மானதாகும். காலே, கீரை போன்ற பச்சை நிற காய்கறிகள் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினை அதிகம் உறிஞ்ச உதவுகிறது.
இறைச்சிகள்
உங்கள் வயதிற்கேற்ப போதுமான அளவு புரதத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உங்கள் உடலுக்கு அதிகளவு புரதமும், இரும்புச்சத்தும் அவசியம்.
அறுவை சிகிச்சை மற்றும் காயங்களின் போது உங்கள் தசைகள் சேதமடைகிறது. அந்த தசைகளை சீக்கிரம் சரி செய்தால் தான் காயம் குணமடையும்.
புரதத்தில் உள்ள அமினோ அமிலங்கள் திசுக்களை மீளுருவாக்கம் செய்வதன் மூலமும், காயம் குணப்படுத்துவதை விரைவு படுத்துவதன் மூலமும் தசை சேதத்தை சரிசெய்ய உதவுகின்றன.
இரும்புச்சத்து புதிய இரத்த அணுக்களை உருவாக்குவதால் இரும்பு உங்கள் ஆற்றல் அளவை விரைவாக மீட்டெடுக்க உதவும். கடல் உணவுகள், இறைச்சிகள், பீன்ஸ், பருப்புகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
முட்டை
பண்டைய காலம் முதலே காயம் குணமாக முதலில் கொடுக்கப்படும் பொருள் முட்டை தான். ஒரு முட்டையில் 6 கிராம் புரோட்டின், வைட்டமின் ஏ, ஈ மற்றும் கே, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்,
ரிபோபிளேவின், போலிக் அமிலம், கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து போன்ற அனைத்து ஊட்டச் சத்துக்களும் உள்ளது. காயங்கள் குணமாக தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் முட்டையில் இருப்பதால் முட்டைகளை அதிகம் சாப்பிட வேண்டாம்.
பிரகாச வண்ண பழங்கள்
காயங்களுக்குப் பிறகு பழங்கள் சாப்பிட வேண்டியது அவசியமாகும். பிரகாசமான நிறத்தைக் கொண்ட பழங்களில் வைட்டமின் ஏ, சி, கார்போ ஹைட்ரேட், நார்சத்துக்கள் உடலுக்குத் தேவையான கலோரிகளை பெறலாம்.
காயங்கள் குணமாக நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமாகும். ஆரஞ்சு, ஆப்பிள், தர்பூசணி, அப்ரிகாட், மாம்பழம், தக்காளி போன்ற வற்றை உணவில் சேர்த்துக் கொள்வது காயங்களை விரைவில் குணமாக்கும்.
தண்ணீர்
காயங்கள் விரைவில் குணமாக நமக்கு அவசியமான ஒன்று தண்ணீராகும். நமது உடல் 55-65 சதவீதம் வரை தண்ணீரால் ஆனது என்பதை மறந்து விடக்கூடாது.
உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்வது காயம் விரைவில் குணமடைய அவசியமாகும். குறிப்பாக காயம் இருக்கும் போது வழக்கத்தை விட அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
தண்ணீரில் எலுமிச்சை கலந்து குடிப்பது, தேங்காய் தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்து அதிகம் இருக்கும் பொருட்களை சாப்பிடுவது, தயிர் சாப்பிடுவது போன்றவை காயத்தை விரைவில் குணமாக்கும்.