எலுமிச்சம் பழத்தை பயன்படுத்த டிப்ஸ் !





எலுமிச்சம் பழத்தை பயன்படுத்த டிப்ஸ் !

எலுமிச்சம் பழத்தை வாங்கி அதனை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு வீணாகாமல் பாதுகாக்கலாம்.
எலுமிச்சம் பழம்
எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதி நீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.

எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.
சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து விட்டால் இரண்டு டீஸ்பு ன் எலுமிச்சை சாற்றை அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.

எலுமிச்சம் பழம் சீக்கிரம் கெடாமல் இருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

காய்கறிகள் ஃப்ரெஷாக இருக்க குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

எலுமிச்சம்பழம் சர்பத் தயாரிக்கும் போது சிறிதளவு இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

சமைக்கும்போது கூட்டு, பருப்பு, சாம்பார், லேசாக அடிப்பிடித்துவிட்டால் அதை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி சிறிது எலுமிச்சை சாறு ஊற்றிக் கிளறினால் தீய்ந்த வாசனை வராது.
குழம்பு வைக்கும் போது வெண்டைக்காய் உடைந்து விடாமல் இருக்க, வெண்டைக்காயை வதக்கும் போது இரண்டு துளி எலுமிச்சம் பழச்சாறை ஊற்றினால் வெண்டைக்காய் துண்டுகள் உடைந்து விடாமல் இருக்கும்.
வீட்டில் எலுமிச்சம் பழச் சாதம் தயாரிக்கும் போது சுடு சாதத்தில் பழரசத்தைக் கிளறக் கூடாது.

எலுமிச்சை ஊறுகாய் போடுவதற்கு முன் நன்றாக கொதிக்கும் நீரில் ஒரு டீஸ்புன் சர்க்கரை மற்றும் பழங்களை போட்டு மூடி வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து நறுக்கி, ஊறுகாய் போட்டால் மறுநாளே உபயோகிக்கலாம். கசப்பு தன்மை இருக்காது.
Tags: