கோதுமை பஞ்சாபிகளின் முதன்மையான உணவு. தற்போது தென்மாநில மக்களிடமும், கோதுமை தனியிடம் பிடித்து வருகிறது. பொதுவாக தெரிந்த இந்த குணங்களை தவிர சிறப்பு தன்மைகள் பல நிறைந்தது.
முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.
கோதுமையில் களி செய்து விருப்பமான குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டாலும், கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும்.
வயிற்றில் புளிப்புத் தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
சம்பா கோதுமையைச் சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது. மேலும் மொத்த கொழுப்புச் சத்து அளவு மற்றும் டிரை கிளைசி ரைட்ஸ் (Triglycerides) அளவும் கணிசமாக குறைகிறது.
கோதுமை என்பது அனைத்து காலத்திற்கும் ஏற்ற உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர் கட்டாயம் கண்டு கொள்ள வேண்டிய உணவு தான் கோதுமை.
தேவையானவை . :
சம்பா கோதுமை - 200 கிராம்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கோதுமை மாவு - 100 கிராம்
சோம்புத் தூள் - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
முருங்கைக் கீரை - கைப்பிடி அளவு
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 100 மில்லி
செய்முறை : .
முதலில் சம்பா கோதுமையை அரை லிட்டர் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டு மற்றும் இஞ்சியைத் தட்டி வைக்கவும். ஊறிய சம்பா கோதுமையுடன், கோதுமை மாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதனுடன் மிளகாய்த் தூள், சோம்புத் தூள், இஞ்சி, பூண்டு, முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து அடை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
பப்பட் ஃபிளிட்டர்ஸ் செய்வது எப்படி?
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானவுடன் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். ஓரத்திலும் நடுவிலும் அரை தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி வேகவிடவும்.
2 நிமிடங்கள் கழித்து திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். சுவையான கோதுமை அடை தயார். சட்னியுடன் பரிமாறவும்.