இரும்புச் சத்து உணவுகள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படுத்தும் தெரியுமா?





இரும்புச் சத்து உணவுகள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படுத்தும் தெரியுமா?

உடலின் ஆரோக்கியத்திற்கு ஊட்டசத்துக்கள் மிகமிக அவசியமாக இருக்கிறது. அந்த வகையில், இரும்புச் சத்து என்பது ஹீமோ குளோபின் உற்பத்திக்குத் தேவையான ஒரு அத்தியாவசிய கனிமமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 
இரும்புச் சத்து உணவுகள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படுத்தும்
மேலும் இது உடலில் உள்ள பல்வேறு முக்கியமான செயல் முறைகளில் பங்கு வகிக்கிறது. ஆனால், ஒரு நபருக்கு போதுமான அளவு இரும்புச் சத்து கிடைக்க வில்லை என்றால் என்ன ஆகும்? என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
போதிய இரும்புச்சத்து உடலில் இல்லாத போது, அது இரும்புச்சத்து குறைபாடுள்ள இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. இது உடலில் போதுமான ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாத நிலை என்று கூறப்படுகிறது. 

இரத்த சோகையைத் தடுப்பதில் இருந்து ஆற்றலையும் கவனத்தையும் மேம்படுத்துவது வரை, இரும்புச் சத்தினால் ஏராளமான நன்மைகள் உள்ளன. இரும்புச் சத்து உடலின் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை ஏற்படுத்துகிறது என்று இக்கட்டுரையில் காணலாம்.

இரத்த சோகையைத் தடுக்கிறது
இரத்த சோகையைத் தடுக்கிறது
இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்தும் ஹீமோகுளோபின் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்க மனித உடலுக்கு இரும்புச் சத்து தேவைப்படுகிறது. 

இரத்த சோகை குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கவும் தடுக்கவும் இரும்புச் சத்து உதவுகிறது. இது இரத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதன் விளைவாக ஏற்படுகிறது. 
சோர்வு, மனநிலையில் மாற்றம், மூச்சுத் திணறல் மற்றும் இதயத் துடிப்பு போன்றவை இரத்த சோகையின் அறிகுறிகள். இரத்த சோகை வராமல் தடுக்க இரும்புச் சத்துள்ள உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இரும்புச் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. சேதமடைந்த செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஹீமோ குளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் இது செயல்படுகிறது. 

இதனால் குணப்படுத்தும் செயல்முறை அதிகரிக்கும். ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு நோய்த் தொற்றுகளுக்கு எதிராக போராடவும் நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

கவனம் மற்றும் செறிவு மேம்படுத்துகிறது
கவனம் மற்றும் செறிவு மேம்படுத்துகிறது
உங்கள் உணவில் இரும்புச் சத்து சேர்க்கப்படுவதற்கான மற்றொரு காரணம், கவனம் மற்றும் செறிவை மேம்படுத்து வதற்கும் அறிவாற்றல் செயல்திறனை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. 
உடலில் இரும்புச் சத்து குறைவாக இருக்கும் போது, அது உங்கள் அறிவாற்றல் செயல்பாட்டை பெரிதும் பாதிக்கிறது. இதனால் குறைந்த கவனம் மற்றும் நினைவாற்றல் ஏற்படுகிறது.

ஆற்றலை அதிகரிக்கிறது
ஆற்றலை அதிகரிக்கிறது
போதுமான அளவு இரும்புச் சத்து உணவுகளை உட்கொள்ளல் ஒரு நபரின் அன்றாட செயல்பாட்டில் குறுக்கிடும் சோர்வை போக்குகிறது. ஆகவே, அதிக இரும்புச்சத்துள்ள உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். 

ஏனெனில் இரும்புச் சத்துக்கள் தசைகள் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. இது உடல் மற்றும் மன செயல்திறன் ஆகிய இரண்டிற்கும் முக்கியமானது.

ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது
ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்துள்ள உணவை உட்கொள்வதால், வளர்ந்து வரும் கருவிற்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வழங்க ரத்தம் மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியின் அளவு மிக வேகமாக அதிகரிக்கிறது. 

இருப்பினும், கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்தின் அளவு குறைவாக இருந்தால், அது முன்கூட்டிய பிறப்பு, குறைந்த பிறப்பு எடை மற்றும் 
குழந்தைகளில் பலவீனமான நடத்தை மற்றும் அறிவாற்றல் செயல்பாடு ஆகியவற்றின் அபாயத்தை உயர்த்துகிறது.

தசையை மேம்படுத்துகிறது
தசையை மேம்படுத்துகிறது
போதுமான அளவு உடலின் தசைகளுக்கு தசை வலிமை மற்றும் நெகிழ்ச்சிக்கு தேவையான அளவு ஆக்ஸிஜனை இரும்புச் சத்து வழங்குகிறது. 

இது விளையாட்டு வீரர்களின் சகிப்புத்தன்மைக்கு நன்மை பயக்கும் மற்றும் அவர்களின் தடகள செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. குறைந்த இரும்பு அளவு தசை பலவீனத்தை ஏற்படுத்துகிறது.

சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது
சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது
உங்கள் உடலில் மிகக் குறைந்த அளவு மட்டுமே இரும்புச் சத்து இருந்தால், அது தூக்கப் பழக்கத்தை பாதிக்கும். 

தூக்க மின்மை மற்றும் ஸ்லீப் மூச்சுத்திணறல் போன்ற தூக்க பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
தூக்கமின்மை பிரச்சனையால் இருக்கிறீர்கள் என்றால், இரும்புச் சத்து உங்களுக்கு குறைவாக இருக்கலாம்.

குழந்தைகளுக்கு இரும்புச் சத்து
குழந்தைகளுக்கு இரும்புச் சத்து
குழந்தை, ஆண் மற்றும் பெண்களுக்கு தினசரி பரிந்துரைக்கப்படும் இரும்பு சத்து அளவின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

0 முதல் 6 மாதங்கள் வரை - 0.27 மிகி

7 முதல் 12 மாதங்கள் - 11 மி.கி.

1 முதல் 3 ஆண்டுகள் - 7 மி.கி.

4 முதல் 8 ஆண்டுகள் - 10 மி.கி.

ஆண்களுக்கு இரும்புச் சத்து

9 முதல் 13 ஆண்டுகள் வரை - 8 மி.கி.

14 முதல் 18 ஆண்டுகள் வரை - 11 மி.கி.

19 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் - 8 மி.கி.

பெண்களுக்கு இரும்பு சத்து
பெண்களுக்கு இரும்பு சத்து
9 முதல் 13 ஆண்டுகள் வரை - 8 மி.கி.

14 முதல் 18 ஆண்டுகள் வரை - 15 மி.கி.

19 முதல் 50 ஆண்டுகள் வரை - 18 மி.கி.

51 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் - 8 மி.கி.

கர்ப்ப காலம் - 27 மி.கி.

பாலூட்டும் காலம் - 10 மி.கி.

அதிகபடியான இரும்புச் சத்து
அதிகபடியான இரும்புச் சத்து
உணவு மற்றும் வாய்வழி இரும்பு சப்ளிமெண்ட்ஸ் மூலம் போதுமான அளவு இரும்புச்சத்தை பெறலாம். 

சப்ளிமெண்ட்ஸ் வடிவத்தில் இரும்புச்சத்து அதிகமாக உட்கொள்வது வயிற்று வலி, உறுப்பு செயலிழப்பு, உட்புற இரத்தப்போக்கு, வலிப்பு தாக்கம் மற்றும் மரணம் போன்ற மோசமான பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
பெரியவர்களுக்கு இரும்புச் சத்துக்களின் பரிந்துரைக்கப்பட்ட அளவு ஒரு நாளைக்கு 60 முதல் 120 மி.கி ஆகும். ஆதலால், இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
Tags: