தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா செய்வது எப்படி?





தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா செய்வது எப்படி?

தக்காளியில் உள்ள லைகோபீன் ஆனது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. 
தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா
சமைத்த தக்காளியானது உடலில் லைக்கோபீன் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே சமைத்த தக்காளியானது பச்சை தக்காளியை விடவும் அதிக பயனளிக்கிறது. 
தக்காளியானது தினமும் நமது உடலுக்கு தேவையான அளவில் வைட்டமின் சியை கொடுக்கிறது. இயற்கையாகவே இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. 

இது உடலில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் பிரச்சனை களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. மேலும் இது வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

நமது நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்த இது உதவுகிறது. 

இரத்தம் உறைதலுக்கு உதவக்கூடிய வைட்டமின் கேயானது தக்காளியில் அதிகமாக உள்ளது. எனவே தக்காளி ஒரு மல்டி வைட்டமின் உணவு என கூறலாம்.

தக்காளியை சாறாக மாற்றி நமது சருமத்தில் தடவினால் அது நமக்கு பல நன்மைகளை அளிக்கும். சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய இது உதவுகிறது. 

மேலும் தினசரி இதை சருமத்தில் தடவுவது மூலம் சருமத்தை நாம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள முடியும். 

தக்காளியில் எண்ணற்ற வைட்டமின்கள் இருப்பதால் அவை நமது சருமத்திற்கு பல நன்மைகளை செய்கிறது. சருமத்தை எளிமையாக பாதுகாக்க நாம் எளிமையாக தக்காளி சாறை பயன்படுத்தலாம்.
என்னென்ன தேவை?

பழுத்த பெங்களூர் தக்காளி - 4,

பெரிய வெங்காயம் - 1,

ஏலக்காய் - 2, நறுக்கிய பனீர் - 1 கப்,

தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்,

கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,

கொத்த மல்லித்தழை - சிறிது.
மூளை முடக்கம் என்றால் என்ன? இது எப்படி ஏற்படுகிறது?
எப்படிச் செய்வது?
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பனீரை சுடு தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால் பனீர் மிருதுவாகி விடும்.

கடாயில் எண்ணெயை காய வைத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

பின்பு மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், ஏலக்காய், கரம் மசாலாத்தூள், லேசாக தண்ணீர் சேர்த்து, தக்காளியை போட்டு வதக்கி, பனீர், உப்பு போடவும். 
சுவையான கிறிஸ்மஸ் பிளம் கேக் செய்வது எப்படி?
மசாலா நன்கு கொதித்து கெட்டியாக வந்ததும் இறக்கி கொத்த மல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
Tags: