டேஸ்டியான தேங்காய் துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal





டேஸ்டியான தேங்காய் துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal

எலும்புகளை பலப்படுத்தி, சரும நோய்களை தீர்த்து, இரத்த சோகையை விரட்டும் தேங்காய் பால். உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். 
தேங்காய் துவையல்
ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. 

குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், உலகத்தில் உள்ள பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால்,  உடலானது ஹீமோ குளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும். 

இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை  உண்டாக்கும். ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்து விடுகிறது.

எப்போ தெல்லாம் தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படுகிறதோ, அப்போ தெல்லாம் கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய் பாலை பருகினால் நல்ல பலன் கிடைக்கும். 
ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. பொதுவாக துவையலை சுடுகஞ்சி, ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். 

துவையலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் துவையலைத் தான். இந்த தேங்காய் துவையல் செய்வது மிகவும் சுலபம். 

அதோடு இந்த துவையல் வெள்ளை சாதத்துடன் சேர்த்து பிரட்டி சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். சிலருக்கு தேங்காய் துவையல் சரியாக செய்யத் தெரியாது. 
திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் தீவில் விடப்படும் பெண்கள் !
நீங்களும் அத்தகையவர்களுள் ஒருவரானால், இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே தேங்காய் துவையல் எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப் பட்டுள்ளது. 

அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: 

துருவிய தேங்காய் - 1/2 கப் 

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை வரமிளகாய் - 2 

புளி - 1 துண்டு

எண்ணெய் - 1 டீஸ்பூன் 

உப்பு - சுவைக்கேற்ப 

செய்முறை : 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின் அதில் புளி, பெருங்காயத் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 

பின்பு துருவிய தேங்காய் சேர்த்து ஈரப்பசை போகும் அளவில் பொன்னிறமாகுமாறு வறுத்து இறக்க வேண்டும். 

பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு, சிறிது நீர் ஊற்றி, கொரகொரவென்று அரைத்தால், தேங்காய் துவையல் தயார். 
குறிப்பு: 

வேண்டுமானால், வறுக்கும் போது ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்துக் கொள்ளலாம். துவையல் எப்போதும் சற்று கெட்டியாகவும், மென்மையாக இல்லாமல் கொரகொரவென்றும் தான் இருக்க வேண்டும். 

எனவே அதற்கேற்ப நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். விருப்ப முள்ளவர்கள், துவையலை தயார் செய்த பின்னர் கடுகை தாளித்து சேர்க்கலாம்.