டேஸ்டியான அரிசி உப்புமா செய்வது எப்படி? #Uppuma





டேஸ்டியான அரிசி உப்புமா செய்வது எப்படி? #Uppuma

பச்சரிசி என்பது அறுவடை செய்த நெல்லை பதமாக காய வைத்து, மெஷினில் கொடுத்தால், உமி வேறு அரிசி வேறாக வந்து விடும். இதுவே பச்சரிசி. புழுங்கலரிசி என்பது நெல்லை வேக வைத்து, காய வைத்து பின் அரைப்பார்கள். 
அரிசி உப்புமா செய்வது
அரிசியில் உடலுக்கு தேவையான கார்போ ஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. மேலும் ஸ்டார்ச் மற்றும் பல்வேறு விதமான ஊட்டச் சத்துக்களும் அதில் நிறைந்துள்ளன. 

அதே சமயத்தில் அரிசி உணவை அதிகம் உட்கொள்ளும் போது அவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து உடல் எடை கூடுவதற்கு வழிவகுக்கும். 
பச்சரிசி அதிகம் சாப்பிடுவதால் அதிகரிக்கும் உடல் உஷ்ணம் காரணமாக மலக்குடல் தடிப்பு மற்றும் அழற்சி பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதன் காரணமாக மலம் கழிக்கலையில் மலத்துடன் இரத்தம் வெளிப்படுகிறது.

துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம். 
துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. சரி இனி பச்சரிசி பயன்படுத்தி டேஸ்டியான அரிசி உப்புமா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை:

பச்சரிசி - ஒன்றரை கப்

உப்பு - தேவையான அளவு

தேங்காய்த் துருவல் - கால் மூடி

திரித்தத் துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி
10,500 ரெஸ்டாரண்ட்களை நீக்கிய ஸ்விகி, ஜோமேட்டோ
தாளிக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 2 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 3 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2

பச்சை மிளகாய் - 1

முந்திரிப் பருப்பு - 10

இஞ்சி - 1 துண்டு

கறிவேப்பிலை - 2 இணுக்கு
செய்முறை:
1. அரிசியை 3 மணி நேரம் சுடு தண்ணீரில் ஊற விட வேண்டும்.

2. அரிசியை ஈரம் போக உலர்த்தி மின்னரைப்பானில் உப்பு சேர்த்து நற நற பதத்திற்கு (மையாக அரைக்காமல்) அரைத்து எடுக்கவும்.

3. துவரம் பருப்பைத் திரித்துக் கொள்ளவும்.

4. ஒன்னரை கப் அரிசிக்கு 4 கப் தண்ணீரைத் தனியே சுட வைக்கவும்.

5. ஒரு வாணலியில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு அரைத்த அரிசிக் கலவையைச் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் வதக்கவும்.

6. கொதிக்கும் சுடு நீரை அரிசிக் கலவையுடன் கொட்ட வேண்டும், பிறகு திரித்தத் துவரம் பருப்பு (இதுவும் நற நற பதம்), காயம், தேங்காய்த் தூள் சேர்த்துக் கிளற வேண்டும்.

7. 8 நிமிடங்களில் அரிசி உப்புமா வெந்து விடும்.
8. பிறகு கறிவேப்பிலை தூவி எண்ணெய் விட்டு இறக்கவும்.

9. அரிசி உப்புமாவிற்குக் காரச்சட்னி அருமையான இணையுணவு.

10. இதே உப்புமாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து அரிசி உப்புமா கொழுக்கட்டை யாக்கலாம்.
Tags: