முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு சத்தான உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது.
அவை உயர்தர புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கிறது. கூடுதலாக, முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆண்டி -ஆக்ஸிடண்டுகள் உள்ளன.
அவை உயர்தர புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கிறது. கூடுதலாக, முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆண்டி -ஆக்ஸிடண்டுகள் உள்ளன.
ஒரு முட்டையைச் சரியாக வேகவைக்க குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். இதற்கு மேல், முட்டையை அதிக நேரம் வேக வைக்கக் கூடாது.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முட்டையை வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும்.இதுவரை எத்தனையோ ஸ்டைலில் முட்டை குழம்பை செய்து சுவைத்தி ருப்பீர்கள்.
ஆனால் காரைக்குடி ஸ்டைல் முட்டை குழம்பை செய்து சுவைத்த துண்டா?
இல்லை யெனில், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காரைக்குடி முட்டை
குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது.
இந்த காரைக்குடி முட்டை குழம்பு காரமாக இருப்பதோடு, நல்ல ருசியோடு
இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில்
இருக்கும்.
சரி, இப்போது காரைக்குடி முட்டைக் குழம்பை எப்படி செய்வதென்று
பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
சின்ன வெங்காயம் - 200 கிராம் (தோலுரித்து நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சிக்கன் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முதலில் முட்டையை நீரில் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி, முட்டை ஓட்டை
நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி விட வேண்டும்.
விண்வெளி செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
பின் அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை
வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, இறுதியில் முட்டையை சேர்த்து சிறிது நேரம்
கொதிக்க விட்டு இறக்கினால், காரைக்குடி முட்டைக் குழம்பு ரெடி!