பாதாம் பர்பி செய்வது | Almonds Barfi Recipe !





பாதாம் பர்பி செய்வது | Almonds Barfi Recipe !

தேவையானவை:

பாதாம்பருப்பு - 1 டம்ளர்

சர்க்கரை - 2 டம்ளர்

நெய் - 3/4 டம்ளர்

செய்முறை:
பாதாம் பர்பி
1. பாதாம்பருப்புகளைச் சுடு நீரில் ஊற வைத்துத் தோல் நீக்கிக் கொள்ளவும்.

2. மின்னரைப்பானில் பாதம்பருப்புகளை விழுதாக அரைக்கவும்.
3. மிதமானல் தீயில் வாயகன்ற கனமான வாணலியில் நெய்யை விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.

4. இதனுடன் சர்க்கரையைச் சேர்க்கவும்.

5. மிதமான தீயில் கலவையைக் கிளறிக் கொண்டே வரவும்

6. கெட்டியான பதத்தின் போது நெய்யை விட்டுக் கிளறி நெய் தடவின தாம்பாளத்தில் மாற்றிக் கொட்டவும்,சமப்படுத்தி வில்லைகள் போடவும்.

7. பாதாம் பர்பி அல்லது கேக் என்றழைக்கப்படும் ருசியான இனிப்பை மிகவும் எளிதாகச் செய்து விட முடியும்.
Tags: