உக்ரா செய்வது | Ukra !





உக்ரா செய்வது | Ukra !

தேவையான பொருட்கள்:

ரவை – 1 கோப்பை

பாசிபருப்பு – 1 கோப்பை

வெல்லம் – 1 ½கோப்பை

ஏலக்காய் – 2

முந்திரிபருப்பு – 1 தேக்கரண்டி

நெய் – 50 கிராம்

செய்முறை:
உக்ரா
பாசிபருப்பை வெறும் சட்டியில் பொன்னிற மாக வறுத்து வேக வைத்துக் கொள்ளவும்.
ரவையை சட்டியில் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சட்டியில் ரவையுடன் தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். வெந்ததும் பாசிபருப்பு, வெல்லம்

இவற்றை சேர்த்து நெய் விட்டு நன்கு கிளறவும், இவற்றை ¼மணி நேரம் அடுப்பில் வைக்கவும். 

அதை அடிக்கடி கிளறவும். பின் தேங்காய் துருவல், ஏலக்காய், முந்திரிபருப்பு சேர்த்து இறக்கி விடவும். சுவையான உக்ரா தயார்.
Tags: