பருவமழை காலத்தில் சூடான மற்றும் காரமான சோளத்தை சாப்பிடாமல் யாரும் இருக்க மாட்டார்கள். இதனை சொல்லும் போதே பலருக்கும் இப்போது நாக்கு ஊறுகிறதா...? எங்களுக்கும் அப்படித்தான் உள்ளது.
சாலையோரத்தில் தள்ளுவண்டியில் நெருப்பில் எரியும் சோளக்கதிரை பலரும் விரும்பி உண்பர். அல்லது நின்று அதன் வாசனையை மட்டுமாவது நுகர்ந்து விட்டு செல்வர். ஆனால், இப்போது இது அரிதாகி விட்டது.
தற்போது மக்காச் சோளத்துக்கு பதிலாக ஸ்வீட் கார்ன் தான் எங்கும் நிறைந்துள்ளது. இதனை தான் தற்போது மக்களும் விரும்பத் துவங்கி யுள்ளனர்.
நாட்டு மக்காச் சோளத்தில், அமெரிக்க ஸ்வீட் கார்ன் சோளத்தை விட அதிக ஊட்டச்சத்துகள், சுவை மற்றும் தனித்துவமான நன்மைகள் உள்ளன.
இது குறித்து, பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், இந்தியர்கள் நம் நாட்டு உணவு வகைகளை விட்டு விட்டு, மற்ற நாட்டு உணவு வகைகளை விரும்பத் துவங்கி விட்டனர்.
மேலும், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் பி 1 மற்றும் வைட்டமின் பி 6 ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகவும் நாட்டு மக்காச்சோளம் உள்ளது.
இதனால் தான் ஸ்வீட் கார்னுக்கு பதில், நாட்டு மக்காச்சோளம் மிகவும் நல்லது நிபுணர்கள் கூறுகின்றனர். சரி இனி கார்ன் பயன்படுத்தி டேஸ்டியான கார்ன் பரோத்தா ரெசிபி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை:
சோளம் (கார்ன்) - 1/4 கிண்ணம்
கோதுமை மாவு - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
காரப்பொடி - 1/2 தேக்கரண்டி
கொத்த மல்லி - சிறிதளவு
கோதுமை மாவு - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
காரப்பொடி - 1/2 தேக்கரண்டி
கொத்த மல்லி - சிறிதளவு
ராய கோலா பிரியாணி செய்வது எப்படி?
செய்முறை:
சோளம், பச்ச மிளகாய், சீரகத்தை நீர் அதிகம் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன், அரைத்த கலவையைப் போட்டு உப்பு, பொடியாக
நறுக்கிய கொத்த மல்லி, காரப்பொடி, எண்ணெயைச் சேர்த்துப் பிசைந்து பத்து
நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பிறகு சப்பாத்திக் கல்லில் இட்டு கார்ன் சப்பாத்தி களாகச் செய்தெடுக்கவும்.
இன்னொரு முறை:
1. இம்முறையில் அரைத்த சோளக் கலவையை எண்ணெய் விட்டு வதக்கி, அதனுடன் பொடியாக நறுக்கிய கீரையையும் சேர்த்துக் கெட்டி யாக்கவும்.
2. கோதுமை மாவு தனியே பிசைந்து கொள்ளவும்.
3. சோளம் பூரணத்தை உள்ளே வைத்து பரோத்தாக் களாகச் செய்யவும்.