நாட்டுக்கோழி வெள்ளை மசாலா செய்வது எப்படி?





நாட்டுக்கோழி வெள்ளை மசாலா செய்வது எப்படி?

உலகில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவில் ஒன்று கோழி இறைச்சி. என்னதான் வகை வகையான அசைவ உணவு இருப்பினும் நாட்டுக் கோழியின் சுவை தனிசுவையே ஆகும். 
நாட்டுக்கோழி
எலும்புகளை ஆரோக்கியமாக்கும் நாட்டுக்கோழி இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.

அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். நம்மூரில் நாட்டுக்கோழி தீமை என்று கூறுபவர் அதிகம். ஏனேனில் அவர்களுக்கு நாட்டுக் கோழியின் நன்மைகள் தெரியாது.

அடுத்த முறை நாட்டுக்கோழி தீமை என யாராவது கூறினால் கீழ் உள்ள குறிப்பு ஒன்றை சொல்லுங்கள். அளவாக சாப்பிட்டால் நாட்டுக்கோழி நன்மையை தரும். நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. 

ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச் செய்ய முக்கியமானது ஆகும். பொதுவாக, தினசரி ப்ரோடீன் தேவை = 1 கிலோ உடல் எடைக்கு 1 கிராம் ப்ரோடீன் தேவை.

விளையாட்டு வீரர்களுக்கு, தினசரி ப்ரோடீன் தேவை ஒரு பவுண்டுக்கு (Pound) 0.6 கிராம் முதல் 0.9 கிராம் வரை இருக்கும். 

நாட்டுக் கோழியில் உள்ள B வைட்டமின்கள் கண்புரை மற்றும் தோல் கோளாறுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பலவீனத்தை நீக்கவும், செரிமானத்தை மேன்படுத்தவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.
நாட்டுக்கோழிக் குழம்பு குழைத்த சாதத்தைச் சாப்பிட்டு, வீரத்துடன் வாழ்ந்த மனிதர்கள் அப்போது அதிகம். தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்
கும். 

நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன. சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி சிறந்த மருந்து.

இத்தகைய நன்மைகளை கொடுக்கும் நாட்டுக்கோழி யிலிருந்து நாட்டுக்கோழி வெள்ளை மசாலா எப்படி? செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி - ½ கிலோ

சின்ன வெங்காயம் - ¼ கிலோ

பூண்டு – 100 கிராம்

கொத்த மல்லி இலை – சிறிது

கறிவேப்பிலை – சிறிது

பச்சை மிளகாய் – 50 கிராம்

உப்பு – தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் – 1 கோப்பை

சோம்பு – 2 தேக்கரண்டி
கசகசா – 2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு – 2 தேக்கரண்டி

சீரகம் – 2 தேக்கரண்டி

தாளிக்க:

பட்டை – 2

சோம்பு – ½ தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
நாட்டுக்கோழி வெள்ளை மசாலா
அரைப்ப தற்காகக் கொடுக்கப் பட்ட பொருட்களை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். நாட்டுக்கோழி கறியை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். சட்டியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி பட்டை, சோம்பு, உளுந்தம் பருப்பு இவற்றை பொரிய விடவும்.

பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை இவற்றை நன்கு வதக்கவும். பின் நாட்டுக்கோழி கறியையும் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். 

அரைபதம் வெந்தவுடன் உப்பு மற்றும் அரைத்த மசாலாவையும் சேர்த்து வேக விடவேண்டும். வெந்தவுடன் கொத்த மல்லி இலையைத் தூவி இறக்கி விடவும், சுவையான நாட்டுக்கோழி வெள்ளை மசாலா தயார்.
Tags: